சென்னையில் சில பகுதிகளில் பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த பூணூல் அறுப்பு, திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு உடன்பாடானது அல்ல. இதை அவர்கள் செய்திருக்கக்கூடாது என்பதே திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு. ‘பூணூல்’ என்ற பிறப்பின் ஆதிக்க சின்னத்தை கருத்தியலாக மக்களிடையே எடுத்து விளக்கி வருகிறது, பெரியார் இயக்கம்.

இந்த நிகழ்வை -திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்கவில்லை என்றாலும் இதை தனித்துப் பார்க்காமல் அண்மைக்காலமாக பெரியாரை இழிவாக தரம் தாழ்ந்து விமர்சிக்கும் கருத்துகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும். எச்.ராஜா போன்ற பார்ப்பனர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் பெரியார் படங்கள் கொளுத்தப்படுவதையும், செருப்பாலடிக்கப்படுவதையும் காவல்துறை தடுக்காமல் அனுமதித்து வருகிறது. தாலியகற்றிய பெண்களை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று அதே பார்ப்பனர் பேட்டி தருகிறார். பெரியார் இயக்கம் நடத்தும் நிகழ்வுகளில் கலவரம் விளைவிப்பது, தடுக்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் பெரியார் இயக்கத்தினரை ஆத்திரமூட்டி அவர்களின் செயல்பாடுகளை முடக்கிடும் பார்ப்பனிய சதிவலையில் இந்தத் தோழர்கள் சிக்கியிருக்கக் கூடாது.

- தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It