உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவின் எல்லை வழியாக வங்கதேசத்துக்கு மாடுகள் கடத்தப்படுவதை எல்லைப் பாதுகாப்பு படையினர் அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருப்பதோடு, வங்கதேசத்துக்காரர்களுக்கு மாட்டிறைச்சியே கிடைக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் எதற்கும் பயன்படாத அடிமாடுகள், வங்கதேசத்துக்கு கடத்தப்படுகின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இதைத் தடுப்பது இல்லை. ஆண்டுதோறும் இப்படி கடத்தப்படும் மாடுகள் 25 இலட்சம். வங்க தேசத்தில் இந்த அடிமாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக பதப்படுத்தப்பட்டு, ‘வளைகுடா’ நாடுகளுக்கு வங்க தேசத்திலிருந்து ஏற்றுமதியாகின்றன. வங்க தேசத்தில் இதற்கான தேவை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், இந்தியாவில் பயன்பாடு இல்லாத மாடுகளை பாதுகாக்க முடியாததால் விற்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எனவே, எல்லையில் கடத்தல் ‘கண்டும் காணாமல்’ அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் ராஜ்நாத் சிங், இப்போது கடுமை காட்டுமாறு கூறியிருக்கிறார்.

இதனால், பல்வேறு பசு பராமரிப்பு கொட்டடிகளில் மாடுகளை கூடுதலாக பராமரிக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. இதற்காக ரூ.31,000 கோடி கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். இந்த செலவு, குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ஊட்டச் சத்துக்காக செலவிடப்படும் தொகையை விட நான்கு

மடங்கு அ திகம். குழந்தைகள் நலனுக்கு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.8,000 கோடி அடிமாடுகளை வெட்டாமல் பராமரிக்க செலவிடப்பட வேண்டிய தொகை ரூ.31,250 கோடி ஏழைக் குழந்தைகள் நலனைவிட பசு மாடுகளின் நலன்தான். இந்த ‘வேத புரோகித’ ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

பம்பாய் அய்.அய்.டி.யில் கடவுள் நம்பிக்கையற்றோர் 52 சதவீதம்

பம்பாய் அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார்கள். 22 சதவீதம் முழுமையாக நாத்திகர்கள் என்றும்,

30 சதவீதம் பேர் கடவுள் பற்றி கவலைப்படாதவர்கள் என்றும் கூறியுள்ளனர். அய்.அய்.டி. நிறுவனத்துக்காக நடத்தப்படும் பத்திரிகைக்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பி.டெக். படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் படிக்கும் பொறியியல் படிப்பு, அறிவியல் சார்ந்தது. அறிவியலை நம்பும் என்னைப்போன்ற பல மாணவர்கள், கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை ஏற்கவியலாது” என்றார். 2014ஆம் ஆண்டில் அய்.அய்.டி.யில் சேர்ந்த 260 மாணவர்களிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 (தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ஏப்.20 2015)

4000 மனித உயிர்களை பலி கொண்ட இயற்கையின் சீற்றம்

நில நடுக்கத்தால் நேபாளத்தில் 4000 பேர் உயிரிழந்து விட்டனர். வட மாநிலங்களிலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச் சரிவிலும் பலர் உயிரிழந்துள்ளனர். இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்துவிட்ட மனித உயிர் இழப்புகள் மிகுந்த துயரத்தையும் கவலையையும் தரு கின்றன. நில நடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய அறிவியல் கண்டு பிடிப்புகள் இன்னும் வரவில்லை. அறிவியலின் முக்கியத்துவம், இப் போதுதான் புரிகிறது. ஒரே நேரத்தில் ஜாதி, மத வேறுபாடு ஏதுமின்றி மனித உயிர்கள் பலியாகிவிட்டன. இயற்கையோடு இணைந்த வாழ் விற்கோ, இயற்கையின் சீற்றத்துக்கோ, ஜாதியும் இல்லை; மதமும் இல்லை. இயற்கையின் முன் மனிதர்களின் அடையாளம் மானுடம் மட்டும்தான்! உறவுகளை, உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களின் துயரங்களில் நாமும் பங்கேற்கிறோம்!

பூணூல் : காந்தியார் எதிர்ப்பு

பூணூல் அணிவதை எதிர்த்து காந்தியார் பதிவு செய்த கருத்து:

“இலட்சக்கணக்கான இந்துக் கள் பூணூல் தரிக்காமல் இருக்கும் போது அது எனக்கு அவசிய மென்று தோன்றவில்லை. ஆதலால் நான் அதை அணிய வில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு, மாசற்ற வாழ்வு வாழ வேண்டும்., ஆத்மார்த்தீக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்க வேண்டும் இப்பூணூல். இன்றுள்ள இந்துக்கள், இந்து, இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலை யும் அணிந்து கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களா என்பது எனக்கு சந்தேகம். இந்து மதத் திலுள்ள தீண்டாமை, உயர்வு தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம், யாவும் ஒழிந்த பிறகுதான் இந்து வுக்கு பூணூல் அணியும் உரிமை உண்டு. ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை”.

(‘காந்தியார் சுயசரிதம்’, பக்.480)

Pin It