பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததால் ‘தேச பக்தர்கள்’ என்று தேசபக்தி முத்திரைக் குத்திக் கொள்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். அதே நேரத்தில் ஈ.வெ.ரா., பிரிட்டிஷாரை ஆதரித்த தேசத் துரோகி என்று எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் பேசி வருகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் இருந்த நெருக்கமான உறவு தொடர்புகளை வரலாற்று ஆவணங்கள் பதிவு செய்திருக்கின்றன. கடந்த தொடரில் இது குறித்து பல வரலாற்று செய்திகளைப் பதிவு செய்துள்ளோம். வேறு சில முக்கிய வரலாற்று நிகழ்வுகள் இளைய தலை முறைக்கு வியப்பாக இருக்கும். மறைக்கப்படும் அந்த தகவல்கள் சிலவற்றை இந்தத் தொடரில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் நடத்தியபோது பிரிட்டி ஷாரை ஆதரித்தது அன்றைய சாவர்க்கரும் ஆர்.எஸ்.எஸ்.சும் என்பதை கடந்த தொடர்களில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

godse savarkar 350இது குறித்து விரிவான ஆய்வு செய்த ஆண்டர்சன் மற்றும் பாம்லே ஆகியோர் பிரிட்டிஷ் ஆவணங்களிலிருந்தே ஆதாரங்களைப் பதிவு செய்துள்ளார். (ஆதாரம்: ஏ.ஜி. நூராணி எழுதிய ஆர்.எஸ்.எஸ். நூல்)

• வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்தபோது சாவர்க்கர் (ஆர்.எஸ்.எஸ். தத்துவார்த்த தந்தை - காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டவர்). பிரிட்டிஷ் வைஸ்ராய் லின்லித் கோ (Linlith Gow) என்பவரை 1939, அக்.2ஆம் தேதி நேரில் சந்தித்து, நாங்கள் காங்கிரஸ் போராட்டத்தை ஆதரிக்க வில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கே ஆதரவு தருகிறோம் என்று அறிவித்தார். அப்போது பல மாகாணங்களில் பொறுப்புகளில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் தங்கள் அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தார்கள்.

• சாவர்க்கர் மட்டுமல்ல, சங்கிகளின்முன்னோடி தலைவரும் பாஜகவின் முன்னோடி அமைப்பான ஜனசங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத் முகர்ஜி (வங்காள பார்ப்பனர்) பிரிட்டிஷ் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்தார். காங்கிரசார், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரிக்க மாட்டோம் என்று வாக்குறுதியளித்தார். இது குறித்து ஆவணங் களோடு ஆய்வு செய்து வெளி வந்த ஒரு நூலை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மனித வளத் துறை அமைச்சராக இருந்த பா.ஜ.க.வின் முரளி மனோகர் ஜோஷி தடை செய்து விட்டார். காந்தி குப்தா என்பவர் ஆய்வு செய்து வெளியிட்ட அந்த நூலின் பெயர் “சுதந்திரத்தை நோக்கி... இந்தியா வின் சுதந்திர இயக்கத்துக்கான ஆவணங்கள் ‘1943-1944’ என்பதாகும். மூன்று பகுதிகளாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இதை வெளியிட்டது. ஆவணக் காப்பகத்தில் இந்த நூலைக் கண்டுபிடித்த ஏ.ஜி.நூராணி, வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜன சங்கத்தை நிறுவியவரான ஷியாம் பிரசாத் முகர்ஜி, வங்காள மாகாண அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அம்மாகாணத்தின் முதல்வர் ஏ.கே. பல்வுல் ஹக். அவர், இந்திய பரனியன் முஸ்லிம் லீக் ஆட்சியின் பிரதிநிதி. இதே வங்காள மாகாண சட்டமன்றம், பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து, தீர்மானத்தை நிறை வேற்றியது. முகர்ஜி - பாகிஸ்தானில் அடங்கி யுள்ள சிந்து மாககாணத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். எனவே, இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாட்டை தனது அமைச்சர் பதவி வாய்ப்புக்காக எடுத்ததோடு, பாகிஸ்தான் பிரிய வேண்டும் என்ற தீர்மானத்தை யும் ஆதரித்தார். பிறகு வங்காள கவர்னர் சர். ஜான்ஹர்பர்ட்டை 1942 ஜூலை 26இல் சந்தித்து ஒரு மனுவை அளித்தார். காங்கிரசின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். எங்களுடைய வங்காளத்தில் அப்படி ஒடுக்கிக் காட்டுவோம்; அதற்கான நிர்வாக ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வைத்துள்ளோம்” என்று பிரிட்டிஷ் ஆளுநருக்கு ஆலோசனை கூறினார். (Advising him to crush the revolt)

அதற்குப் பிறகு முகர்ஜி பம்பாயில் ஜின்னாவை சந்தித்தார். மூன்று மணி நேரம் இருவரும் பேசி னார்கள். இறுதியாக சாவர்க்கரை, வீர சாவர்க்கர் என்று கொண்டாடும் சங்கிகளின் வரலாற்றுப் புரட்டுகளை அம்பலப்படுத்தும் செய்திகளோடு இந்தப் பகுதியை நிறைவு செய்வோம்.

சாவர்க்கர் ஏன் கைது செய்யப்பட்டார்?

1909 ஜூலை முதல் தேதி இலண்டனில் உள்ள இம்பீரியல் இன்ஸ்டிடியூட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக அதிகாரி வில்லி வந்தார். திங்காராவும் அங்கே மேலை நாட்டு உடையோடு வந்திருந்தான். திங்காராவின் தந்தையும் வில்லியும் நண்பர்கள். எனவே திங்காராவை - கர்சானுக்கு ஏற்கனவே தெரியும். திங்காராவைப் பார்த்தவுடன், “ஓ, மைடியர்..... யு ஆர் ஹியர்” என்று கூறிக்கொண்டு, கர்சான், திங்காரா விடம் மகிழ்ச்சியோடு கைகுலுக்க வந்தார். திங்காரா மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, கர்சானை நோக்கி 5 குண்டுகள் சுட்டான். கர்சான் இரத்த வெள்ளத்தில் பிணமானார். கர்சானைக் காப்பாற்ற ஓடி வந்த டாக்டர் கோவாஸ்லால் காகா என்பவரும், குண்டு பாய்ந்து இறந்தார்.

கர்சான் பங்கேற்க வந்தது, தேசிய இந்தியக் கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி. அதே ஆண்டு டிசம்பர் மாதம் பாபாராவுக்கு (சாவர்க்கரின் அண்ணன்) தண்டனை விதித்தார் என்று நாசிக் மாவட்ட ஆட்சித் தலைவராகவும், நாசிக் மாவட்ட நீதிபதியாகவுமிருந்த எம்.டி. ஜாக்சனும் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜாக்சன், தியேட்டர் ஒன்றில் பிரபல மராத்தி நாடகமான ‘ஷாரதா’ எனும் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆனந்த் கான்கரே எனும் சாவர்க்கரின் தீவிர சீடன் அவரை சுட்டுக் கொன்றான். இத்தனைக்கும் ஜாக்சன், பாபாராவுக்கு நேரடியாகத் தண்டனை தரவும் இல்லை; தன்னிடம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை மேல் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பி விட்டார். ஜாக்சன் பிரிட்டிஷ்காரராக இருந்தாலும், சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை மிக்கவர். இந்தியர் களையும், இந்திய இலக்கியங்களையும் மிகவும் நேசித்தவர். இலக்கிய வட்டங்களுடனேயே நெருக்கமாக இருந்தவர், இலக்கியக் கூட்டங்களில் பேசுவதிலும் எழுதுவ திலும், மிகவும் ஈடுபாடு காட்டியவர். இந்து மகாசபைத் தலைவர்களில் ஒருவரான எம். ஆர். ஜெயகர் கூட, ஜாக்சனை மிகவும் புகழ்ந்து எழுதியிருக்கிறார். இந்த இரண்டு கொலைகளிலும், சாவர்க்கரின் பங்கு என்ன? சாவர்க்கரின் புகழ் பாடி - அவரது சுயசரிதையை எழுதியுள்ள தனஞ்செய்கீர் இதுபற்றி - இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“திங்காரா - சாவர்க்கரிடம், தன்னை ஒப்படைத் துக் கொண்ட சீடன் - வில்லியைக் கொலை செய்வ தற்கு சில நாட்களுக்கு முன் திங்காரா, தனது தலைவர் சாவர்க்கரிடம் கேட்டான், ‘உண்மையிலேயே நான் வீரத் தியாகம் புரியும் நேரம் நெருங்கி விட்டதா?’ என்று; உடனே தயக்கம் எதுவுமின்றி - உறுதியான குரலில் சாவர்க்கரிடமிருந்து பதில் வந்தது. வீரத்தியாகத்துக்கு உறுதி பூண்டு செய்து முடிக்க எப்போது ஒருவன் தயாராகி விட்டானோ, அப்போதே அவன் வீரத்தியாகிதான்; அவனுக்கு வீரத்தியாகப் பட்டம் வந்தே தீரும்... முன்னாள் இந்திய வைஸ்ராய் கர்சானைத்தான் உடனடியாக திங்காரா குறிவைத்தான்” என்று எழுதுகிறார் கீர்! தனஞ்செய் கீர் எழுதிய வீரசாவர்க்கர் நூல் - பக். 49)

“இந்தக் கொலைக்குத் திட்டமிட்டது நான்தான், என்று தனது சுயசரிதையை எழுதிய தனஞ்செய்கீர் இடம் சாவர்க்கர் முழு உரிமை கொண்டாடினார். இதை கீர் என்னிடம் தெரிவித்தார். திங்காரா விடம், சாவர்க்கர் நிக்கல் முலாம் பூசப்பட்ட ஒரு துப்பாக்கியைக் கொடுத்து, இம்முறை நீ தோற்று விட்டால் பிறகு என் முகத்திலே முழிக்காதே (Don't show me your face. if you fail this time) என்று கூறினார். இலண்டன் போலீஸ் இந்தக் கொலையில் சாவர்க்கருக்குத் தொடர்பு உண்டு என்று உறுதியாக நம்பியது. ஆனால் சாட்சியங்கள் கிடைக்கவில்லை.

இறுதியாக, நாசிக் நீதிபதி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக சாவர்க்கர் குற்றம் சாட்டப் பட்டு அந்தமான் சிறையில் ஆயுள் கைதியாக்கப் பட்டார். கார்சன் வில்லி, ஜாக்சன் கொலைகளுக்கு சாவர்க்கர்தான் காரணம்” - என்று எழுதுகிறார் ராபர்ட்பைன்.

விசாரணை முடிவில் தூக்குத் தண்டனை விதிப்பட்ட திங்காரா தனது கொலையை நியாயப்படுத்தி, சவால் அறிக்கை விடுத்தான்.

அதில், “என் தேசகாரியம், ஸ்ரீராமனின் காரியம்; என் தேச சேவை, நீ கிருஷ்ண பராமாத்மாவுக்குச் செய்யும் சேவை” என்றான்.

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக - சாவர்க்கரின் சகோதரர் பாபாராவ் கைது செய்யப் பட்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சாவர்க்கரை தேடப்படும் குற்றவாளியாக அரசு அறிவிக்கவே - இலண்டனில் உள்ள விக்டோரியா இரயில் நிலையத்தில் 1910இல் சாவர்க்கர் கைது செய்யப்பட்டார்.

அந்தமான் சிறைக்கு கப்பலில் கொண்டு போகப் படும்போது, மார்செ என்ற ஊரில் நங்கூரம் பாய்ச்சி நின்ற போது, கப்பலிலிருந்து குதித்து, கடலில் நீந்தி, பிரஞ்சு நாட்டில் அடைக்கலம் தேடிச் சென்ற சாவர்க்கர் - அங்கு கைது செய்யப்பட்டு, மீண்டும் 1911 ஜூலை 4ஆம் தேதி அந்தமான் கொண்டு வரப்பட் டார். மேற்குறிப்பிட்ட இரண்டு கொலைகளுக்கும் சேர்த்து 50 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அந்தமான் சிறையில் - சாவர்க்கர் என்ன செய்தார்? சிறைக்கு வந்த அடுத்த சில மாதங்களிலேயே - பிரிட்டிஷ் அரசிடம் தனது விடுதலைக்கு கருணை மனு போடத் துவங்கி விட்டார். மற்றவர்களைத் தூண்டிவிட்டு, படுகொலைகளைச் செய்யச் சொல்லி விட்டு, தனக்கு எந்த ஆபத்தும் வராமல் காத்துக் கொள்வதும், தண்டிக்கப்பட்டு விட்டால், அரசிடம் கருணை மனு போடுவதும் சாவர்க்கரின் 'பண்பாக' இருந்திருக்கிறது என்று, ஆய்வாளர் ஏ.ஜி.நூரனி குறிப்பிடுகிறார்.

பிரிட்டிஷ் அரசிடம், முதலில் அவர் சமர்ப்பித்த இரண்டு கருணை மனுக்கள் பற்றிய தகவலை அவர் இரகசியமாகவே வைத்திருந்தார். சிறையில் உடனிருந்த தனது சகோதரரிடம் கூட இதைத் தெரிவிக்கவில்லை. இதே அந்தமான் சிறையில், சாவர்க்கர் இருந்தபோது, எவ்வளவோ அரசியல் கைதிகள், தண்டிக்கப்பட்டு சிறைக்குள்ளே வாடி வந்தார்கள். அவர்களில் யாரும், தன்னை மன்னித்து விடுதலை செய்யுமாறு, பிரிட்டிஷாரிடம் கருணைமனு போடவில்லை ஆனால், வீர சாவர்க்கர் தொடர்ந்து மன்னிப்பு மனுக்களைப் போட்டுக் கொண்டே இருந்தார்.

“நான் பிரிட்டிஷ் அரசுக்கு எநத வகையிலும் சேவை செய்யக் காத்திருக்கின்றேன்” (I am ready to serve the Government in any capacity they like) என்று 1913 அக்டோபரில் வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் ‘வீரத்துடன்’ பதிவிட்டார். பெரியார், தன் மீது தேசத் துரோக சட்டம் பாய்ந்தபோது எந்தத் தண்டனையை யும் ஏற்கத் தயார் என்று கூறி எதிர் வழக்காடவே மறுத்தவர்.

“அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப் பேன்; பார்ப்பன ஆட்சிக்கு எனது முழு சக்தியையும் பயன்படுத்தும் நேர்மையாளனாக இருப்பேன்; இத்தகைய ஒரு பேரரசு எனது இதயத்தில் ஆழமாகப் பதிந்து மதிப்போடு உயர்ந்து விட்டது” என்ற எல்லையே ‘வீர’ சாவர்க்கார் மன்னிப்புக் கடிதம் ‘பிரிட்டிஷ் தேச பக்தியை’ வெளிப்படுத்தியது.

இறுதியாக 1980, ஜூலை 13ஆம் தேதி தலைமை நீதிபதி எம்.சி. சக்ளா மற்றும் நீதிபதி பி.பி.கஜேந்திர கட்கர் முன்னிலையில் சாவர்க்கர் “இனி எதிர்காலத் தில் எந்த அரசியல் நிகழ்விலும் ஈடபட மாட்டேன்; பம்பாய் வீட்டிலிருந்து வெளியேற மாட்டேன்” என்று உறுதி தந்ததோடு, இந்து மகாசபைத் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார். இறுதி வரை அரசியலி லிருந்து ஒதுங்கி வாழ்ந்தவர் என்பதே ‘வீர சாவர்க்கர்’ வீர வரலாற்றின் பதிவான இருந்தது.

(நிறைவு)

- விடுதலை இராசேந்திரன்

Pin It