தமிழ் நாட்டில் திராவிட எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு சொல்லை வைத்துக் கொண்டு பெ. மணியரசன், சீமான் போன்றவர்கள் சொற்சிலம்பம் விளையாடும் அரசியல் எடுபடாது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். மக்களுக்கான அரசியலே தேவை; சொற்சிலம்பு அரசியல் தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

திருச்சியில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் பொதுக் குழு கூட்டம் நடந்த பிறகு செய்தியாளர்களிடையே திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார்.

kolathoor mani and thirumurugan pozhilanபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது பொதுக்குழு 8.10.2021 அன்று திருச்சியில் கூடியது. கூட்டமைப்பின் பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

வேலைத் திட்டங்கள்:

1. எதிர்வரும் நவம்பர் 1ஆம் நாள் தமிழ்நாடு விழாவை அனைத்து ஊர்களிலும் கலைவிழா வோடு இணைத்துப் பெருமளவில் கொண் டாடுவது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய கொடியை விழாக்களில் அனைவரும் ஏந்தி நிற்பது.

2. பார்ப்பனிய வெறியாட்டங்களுக்கு எதிராகக் கருப்புச்சட்டைப் பேரணி நடத்தியது போல், பார்ப்பனிய - சாதியக் கொடுமைகளுக்கு எதிராக நீலச்சட்டைப் பேரணி நடத்தப்பட்டதுபோல், இந்து - வைதீக வேத, புராணக் குப்பைகளுக்கு எதிராகத் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது போல், பாசிச பார்ப்பனியத்திற்கு எதிராக, சனநாயகப் பகைப் போக்குக்கு எதிராக, மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகப் பொது வுடைமைக் கட்சியினரை, பொதுவுடைமைக் கருத்தாளர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, பாசிச பாஜக வே பதவியை விட்டு வெளியேறு என வலியுறுத்திச் ‘செஞ்சட்டைப் பேரணி’யை யும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு எதிர்வரும் 2022 பிப்ரவரி அல்லது மார்ச்சு மாதத்தில் மதுரையில் நடத்துவது.

தீர்மானங்கள்:

1. ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் குறித்துக் கவலை கொள்ளாமல் அவர்களைக் கடுமையாக ஒடுக்கி வரும் இந்திய ஒன்றிய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக் கிறோம். மேலும் விவசாயிகள் மீது வண்டியை மோதியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த ஆசிஸ் மிஸ்ராவுக்குப் பிணை மறுத்து சிறைக் காவலில் வைக்க வலியுறுத்துகிறோம்.

2. நீட் தேர்வை என்ன காரணம் கொண்டும் இனி அனுமதிக்கக் கூடாது எனவும், கல்வித் துறை அதிகாரங்கள் முழுமையாகத் தமிழ்நாட்டு அரசிடமே இருக்கும்படி ஆவன செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

3. எழுவர் விடுதலையைத் தமிழ்நாடு அரசே தன் அதிகாரத்தைக் கொண்டு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

4. ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கிற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் அறிவிப்பும், தமிழ்வழியில் படித்தவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்கிற தொடக்க நிலை அறிவிப்பும், சமூக நீதி நாள் அறிவிப்பும், புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்ததோடு சனவரி 12ஆம் நாளை புலம்பெயர் உலகத் தமிழர் நாள் அறிவிப்பும் பெரியாரிய உணர் வாளர்கள் கூட்ட மைப்பால் வர வேற்கப்படு கின்றன.

5. குமரி மாவட்டத்தில் கனிம வளங்களைச் சூறையாடிவரும் செயல்பாடுகளில் உடனடியாகத் தமிழ்நாடு அரசு தலையிட்டு நிறுத்தம் வேண்டும்..

6. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் களுக்குத் தக்க பாதுகாப்பும், சாதி இல்லை என்கிற பதிவின்படி இட ஒதுக்கீடும் தருவதோடு ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டப் பாதுகாப்பும் கடும் நடவடிக்கைகளும் தேவை என்பதையும் வலியுறுத்துகிறோம்..

7. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் நடுவத் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் குடந்தை அரசன் அவர்களைத் தேடிக் கடந்த 7.10.2021 அன்று காவல் துறையினர் அவர் வீட்டிற்குச் சென்றதுடன், அவரின் தம்பியையும் மிரட்டிக் கைது செய்ய முனைந்திருக்கின்றனர். தேவையற்ற நிலையில், ஏதோ பிற தூண்டலின் காரணமாகக் காவல்துறையினர் எடுத்திருக்கிற இந்த நடவடிக்கையைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மறுக்கவும், கண்டிக்கவும் செய்கிறது. இப்போக்கை அரசு கைவிட வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

8. தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் அடைக்கப் பட்டுள்ள முகாம்களில் உள்ளவர்களில் தமிழீழ நாடு திரும்ப விரும்புவர்களுக்குத் தேவையான உதவியைத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களைக் கலைக்க வேண்டும். முப்பது ஆண்டுகளாக முகாம்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட ஈழத்தமிழர்களுக்கு இங்குக் குடியுரிமை வழங்க ஆவன செய்ய வேண்டும். முகாம்களில் உள்ள பிள்ளைகள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வி பெற வழி யில்லாமலும், சிலர் தனி முயற்சியில் படித்தாலும் வேலை மறுக்கப்படும் நிலையையும் மாற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும் முகாம்களில் இருக்கும் இணையருக்குப் பிறந்த குழந்தைகள் இங்குத் தமிழ்நாட்டிலேயே பிறந்திருந்தும் அக்குழந்தைகளுக்குக் கூட குடியுரிமை தராமல் இருப்பது உலக ஏதிலியர் சட்டத்தையே மதிக்காத போக்காகும். எனவே தமிழ்நாடு அரசு அதிலும் கவனம் எடுத்து ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Pin It