திராவிட மாடல் ஆட்சி முன்னெடுத்த நடவடிக்கைகளாலும், மக்கள் நலத் திட்டங்களாலும் தமிழ்நாடு முக்கியமான 10 சாதனைகளை 3 ஆண்டுகளில் செய்துள்ளது.
1. இந்தியாவின் பொருளாதாரத்தில் தமிழ்நாடு 9% பங்கை வகிக்கிறது.
2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
3. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24% இருக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19% உயர்ந்துள்ளது.
4. இந்திய அளவில் பணவீக்கமானது 6.65% இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97% குறைந்து உள்ளது.
5. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
6. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.
7. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3-வது இடத்துக்கு திராவிட மாடல் ஆட்சியில் முன்னேறி உள்ளது.
8. கல்வியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
9. புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
10. இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.
இந்த பத்து சாதனைகள் மட்டுமா என்றால் நிச்சயமாக இல்லை.
நான் முதல்வன் திட்டம் மூலம் இந்த ஆண்டு இதுவரை 85000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட ஒரே வருடத்தில் அதாவது 2022-2023-ம் கல்வியாண்டில் 13.14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு திறன்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 1,48,169 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பணிக்கு சேர்ந்துள்ளனர்.
3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் அடைந்த பயன்கள்
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 இலட்சம் மகளிர் பயனடைகின்றனர்.
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
- புதுமைப் பெண் திட்டத்தில் 2,72,216 கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் பயன்பெறுகின்றனர்.
- விடியல் பயணம் திட்டத்தில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர்.
- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
- ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 2 இலட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
- விவசாயிகளுக்கு 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு கூடுதலாக 2,99,384 ஏக்கரில் பயிர் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- “நான் முதல்வன் திட்டத்தில் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற 28 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
- ரூ.4,818 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 13 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- இரண்டே ஆண்டுகளில் 2226 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ரூ.5,996.53 கோடி மதிப்பிலான 6,800.68 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
- 2600 ஆண்டு தமிழர் வரலாற்றை உயர்த்திப் பிடிக்கும் கீழடி அகழாய்வுப் பணியில் கிடைத்துள்ள பொருள்களைப் பாதுகாக்கும் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.
- அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் – ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மேம்படுத்தவும் ரூ.200 கோடியில் 1,769 பணிகளை நிறைவேற்றியுள்ளது.
- ரூ.2,358.53 கோடி மதிப்பீட்டில் 44 அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும் (Polytechnic); ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களும் (ITI) தொழில் 4.0 அளவிற்குத் தரம் உயர்த்தப்படுகின்றன.
- அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 970 பயனாளிகளுக்கு ரூ.131.91 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
- 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 28,601 அரசுப் பள்ளி மாணவ மாணவியர் தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.