• ‘விநாயகர் சதுர்த்தி’ என்பது இந்துக்களின் பண்டிகை. பஞ்சாங்கத்தின்படி அது ஆக.25இல் நம்பிக்கையுள்ளவர்களால் வீடுகளில் கொண்டாடப்படுகிறது.  அது மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கான மத உரிமை. அறிவியல் பார்வையில் சிந்திப்போர் இந்த பண்டிகைகளை கொண்டாடுவது இல்லை. இது பகுத்தறிவாளர்களுக்கான உரிமை.

• பிரச்சினை எங்கே துவங்குகிறது? வீட்டுக்குள் பக்தர்கள் கொண்டாடும் பண்டிகையை வீதிகளுக்குக் கொண்டு வந்து மதத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஏனைய மதத்தினரை மத நம்பிக்கை இல்லாதோரை எதிரிகளாக சித்தரித்து கலவரத்தையும் பதட்டங்களையும் உருவாக்கும்போதுதான், ‘மதம்’ அரசியலாக்கப்படுகிறது.

• ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்று முழங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அரசியல் அமைப்புகள் தங்களுக்குள் ‘ஒற்றுமையை’ உருவாக்க முடியாமல் சிலைகளை அமைப்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு வெவ்வேறு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு இடையூறுகளையும் சமூகப் பதட்டத்தையும் உருவாக்கி விடுகிறார்கள். இப்போது சிலைகளை அமைக்கும் ‘இந்து அரசியல்’ அமைப்புகள் எவை? பா.ஜ.க.வின் ஊது குழல்கள்.

• இவர்கள்தான் நமது ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை நியாயப்படுத்துகிறவர்கள்.

• இவர்கள்தான், எரிவாயு மான்யத்தைப் பறித்தவர்களுக்கு முட்டு கொடுப்பவர்கள்.

• இவர்கள்தான், போராடும் நமது விவசாயிகளை அவமதிக்கும் மோடி ஆட்சிக்கு ‘ஜே’ போடுகிறவர்கள்.

• இவர்கள்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி ஆட்சிக்கு வாழ்த்துப்பாடுகிறவர்கள்.

• இவர்கள்தான், மீதேன், ஹைடிரோ கார்பன், பெட்ரோலிய பொருள்களைத் தோண்டி நமது மண் வளத்தை மலடாக்குகிற திட்டங்களைத் திணிப்பதை எதிர்க்கும் நமது மக்களை தேசத் துரோகிகள் என்பவர்கள்.

• இவர்கள்தான் ஜி.எஸ்.டி. வரியைத் திணித்து நமது சிறு தொழில்களை முடக்கு வதற்கு பச்சைக்கொடி காட்டுகிறவர்கள்.

• அடுக்கடுக்காக நமது மக்கள் வாழ்க்கையில் சுமைகளை ஏற்றி வாழ்வியலை முடக்கிடும் பா.ஜ.க. ஆட்சியின் செல்லப் பிள்ளைகள் இவர்கள்தான்.; மோடி ஆட்சிக்கு எதிராக வாய் பேச மறுப்பவர்கள்.

இவர்கள்தான் விநாயகர் அரசியலுக்கு நமது மக்களை அழைக்கிறார்கள்.

இப்போது நடக்கும் விநாயகச் சிலை ஊர்வலங்களுக்குப் பின்னால் நிற்கும் - மக்கள் விரோத அரசியலை தமிழர்களாய், நாம் புரிந்து கொள்வோம்.

நம்பிக்கையாளர்களே! விநாயகர் சதுர்த்தியை வீட்டுக்குள் நடத்தும் பண்டிகையாகக் கொண்டாடுவது உங்கள் உரிமை!

ஆனால், மக்கள் விரோத மதவாத அரசிய லோடு வீதிக்கு வரும் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு ஆதரவு தருவது நமது வாழ்வுரிமையைப் பறிக்கும் அரசியலுக்கு காட்டும் ஆதரவு!

விநாயகன் சிலை அரசியலை புறக்கணிப் போம்;

வாழ்வுரிமைக்கான போராட்டத்துக்கு குரல் கொடுப்போம்;

வாருங்கள், தமிழர்களே!

Pin It