எங்கள் நாட்டிலே வந்து உட்கார்ந்து கொண்டு எப்படி எப்படியோ தந்திரமாய் அதிகாரத்தை, ஆதிக்கத்தை கைப்பற்றிக் கொண்டு தகுதியில்லாத வனுக்கெல்லாம், அயோக்கியர்களுக்கெல்லாம், அவர்கள் பார்ப்பன அடிமைகள், கூலிகள், பிரச்சாரத்தால் பிழைக்க வேண்டிய கூலிகள் என்பதற்காகவும், அவர்களுக்கு பதவியும், செல்வாக்கும், பெருமையும் கொடுத்து வருவது என்றால் என்ன நியாயம்? உள்ளபடி யோக்கியன் ? திறமைசாலிகள், நல்லவர்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லையே! நாம் கேட்டால், நீ சட்டசபைக்கு வாயேன், வந்து உன் காரியத்தை செய்து கொள்ளும் என்றா சொல்வது ?
அந்த சட்டசபை யோக்கியதை தான் என்ன? சென்ற தடவை நடைபெற்ற தேர்தலிலே காங்கிரசின் கதி என்னவாயிற்று? காங்கிரஸ் தோற்றுப்போய்
எதிர்க் கட்சிகள்தானே மெஜாரிட்டியாய் இருந்தன?
உண்மையிலேயே யோக்கியமான ஆட்சியாய் இருந்தால் ஜனநாயகத்தை உள்ளபடியே கருதுபவர்களாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? மெஜாரிட்டியாய் இருந்த காங்கிரஸ் எதிர்ப்பாளர்களைக் கூப்பிட்டல்லவா மந்திரி சபை அமைத்திருக்க வேண்டும்? அதை விட்டு தேர்தலிலே நிற்காத ஒருவரை சட்டத்திற்கு, சட்டத் தத்துவத்திற்கு விரோதமாக கவர்னர் கவர்னர் நாமினேஷன் என்பதன் மூலமாகப் பதவிக்கு கொண்டுவந்து மந்திரிசபை அமைக்கப்பட்டு விட்டது!
இதுதான் சட்டசபையின் யோக்கியதை!
- பெரியார் - 1954