உலகத்தில் பொய் ரொம்ப நாளைக்கு நிற்காது என பல பேர் சொல்லுவார்கள். ஆனால், பார்ப்பான் சொல்லுகிற இந்திய பொய் மட்டும் ரொம்ப நாளைக்கு நிக்குதுங்க. அதுதான் பார்ப்பனீயத்தின் வெற்றி. தனக்கு ஆதரவாக இருக்கிறது என்றால் பொய்யை மெய் என்பான். மெய்யை பொய் என்பான். உங்களுக்கு காசி விசுவநாதர் ஆலயம் தெரியும். காசி விசுவநாதர் பற்றிக் கதை உண்டு.

கதை அல்ல உண்மையான சம்பவம் ஒன்று உண்டு. அவுரங்கசீப் வாழ்ந்த காலத்தில், எல்லோரும் என்ன சொல்வார்கள் என்றால், இசுலாமியர்கள் தான் இந்துத்துவவாதிகளுக்கு எதிரிகள். இசுலாமிய மன்னர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து இந்து கோவில்களை எல்லாம் இடித்து தரை மட்டம் ஆக்கிவிட்டார்கள் என்று ஒரு பொய்ப் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மிக நீண்டகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அவுரங்க சீப் தான் தான் வாழ்ந்த காலத்திலேயே மோசமானவர் என்ற கருத்தும் உண்டு. அந்தப் பொய் பிரச்சாரத்தையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். அவுரங்க சீப் ஆட்சி செய்து கொண்டிருக்கிற சமயத்தில் இராஜஸ்தான் பகுதியிலிருந்து வங்காளத்தை நோக்கி படையுடன் சென்றார். அந்த பரப்பு முழுவதும் அவர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி. அப்பொழுது அவுரங்க சீப்பின் கீழே பல குறுநில மன்னர்கள், ராசாக்கள், பெரும்பான்மையோர் இந்துக்கள். அவர்களை அழைத்துக் கொண்டு படையாக இராஜஸ்தானிலிருந்து வங்காளத்தை நோக்கி செல்கிறார். அப்படி செல்லும்போது காசி வாரணாசி வருகின்றது.

அப்போது உடனிருந்த இந்து மன்னர்கள் சொல்லுகிறார்கள், ‘நாம் சிறிது நாள் இங்கு தங்கியிருப்போம். ஏனென்றால் எங்கள் ராணிகள் எல்லாம் கங்கையில் குளித்து காசி விசுவநாதனை வழிபட வேண்டும் என்று கேட்கிறார்கள்’ என்றவுடன், அதை ஏற்றுக் கொண்ட அவுரங்கசீப் அங்கேயே தங்குவதற்கு உத்தரவிடுகிறார். தங்குகிறார்கள். ராணிகள் எல்லாம் சென்று கங்கையில் குளிக்கிறார்கள்.

காசி விசுவநாதனைச் சென்று வழிபடுகிறார்கள். எல்லாம் முடிந்து திரும்பவும் கிளம்பக் கூடிய நேரம் வந்தாச்சு. கிளம்பும் போது ஒரு ராணியைக் காணோம். அட்ச் என்ற பகுதியின் மன்னனின் மனைவியைக் காணோம். எல்லோரும் சென்று அவுரங்கசீப்பிடம் சொல்றாங்க. குளிக்கப் போனாங்க பார்த்தோம். கோவிலுக்கு சென்றார்கள். அதன் பிறகு காணோம் என்று. அவுரங்கசீப் உத்தரவிடுகிறார், காசி விசுவநாதர் ஆலயம் முழுவதுமாக தேடச் சொல்கிறார். தேடிப் பார்க்கிறார்கள், கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும், மீண்டும் தேடுகிறார்கள்.

அப்போது காசி விசுவநாதர்சிலைக்கு பின்னால் ஒரு விநாயகர் சிலை இருக்கிறது. அந்த விநாயகர் சிலை அசையக் கூடியதாக இருக்கின்றது. அசைத்துப் பார்த்தால் அதன் கீழே படிகள் போகின்றது. கீழே போய் பார்த்தார்கள். அந்த படியின் கீழே இந்த ராணியானவள், காசி விசுவநாதர் ஆலய புரோகிதர்களால் கற்பழிக்கப்பட்டு குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்தாள். கண்டுபிடித்தார்கள். கொண்டு வந்து அவுரங்கசீப்பிடம் இந்த செய்தியை சொன்னார்கள்.

அவுரங்கசீப் உடனே ஆணையிட்டார். காசி விசுவநாதர் சிலையை இக்கோயிலை விட்டு உடனே வெளியேற்றுங்கள் என்றார். வெளியேற்றியவுடன் அந்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டது. கொண்டுச் சென்ற அந்த சிலையை வேறு இடத்தில் வைத்துத்தான் காசி விசுவநாதர் ஆலயம் கட்டப்பட்டது.

இந்தக் கதையை எல்லாம் கூற மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுடைய மதவாத அரசியலுக்கு எது எது ஒத்து வரவில்லையோ அதை எல்லாம் திட்டமிட்டு தவிர்த்து விடுவார்கள். இப்படிப்பட்ட மதவாத அரசியலை நடத்திக் கொண்டிருக்கிற இவர்கள் தான் இன்றைக்கு கூறுகின்றார்கள் - பாலம் கட்டக் கூடாது என்று. எங்களுக்கும் ஒரு ஆசை இருக்கின்றது.

சிங்கள தீவுக்கு பாலம் அமைக்கும் ஆசை கனவு எங்களுக்கும் இருக்கின்றது. ஏன் தெரியுமா? சிங்களத்தில் எங்கள் சகோதரர்கள் இருக்கிறார்கள். பாலம் அமைத்தால் நாங்கள் அவர்களிடம் போய் சேர்ந்து விடுவோம். எங்களுக்கும் அந்த கனவு இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்லுகிற ராமர் பாலம் அல்ல; நாங்கள் கட்டுவோம் உறவுப் பாலம்.

Pin It