• வாரணாசியில் நித்தியானந்தா ஆன்மிக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; ஊரைவிட்டே ஓட்டம். - செய்தி

நித்தியானந்தாஜி, கவலைப்படாதீங்க; தமிழ்நாட்டுக்கு வாங்க; காவல்துறை பாதுகாப்பு தரும். எவராவது எதிர்த்தால் குண்டர் சட்டத்தில் உள்ளேதள்ளும்.

• தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் தேவை! சவுதி அரசு விளம்பரம். - செய்தி

இந்த வேலைக்கு மனு போட முன் அனுபவம் ஏதாவது இருக்க வேண்டுமா?

• மும்பையில் உள்ள சித்திவிநாயகன் கோயிலுக்கு அய்.எஸ்.ஓ. தரச் சான்றிதழை மாநில முதல்வர் வழங்கினார். - செய்தி

என்ன சொல்றீங்க.... ஏனைய வினாயகன் எல்லாம் தரம் கெட்டவர்களா?

• மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள். - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்

நீங்கள் ஆட்சி நடத்தும் கோவாவிலேயே தாராளமாக கிடைக்கும்போது நாங்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்?

• ம.பி. மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 50 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு. - செய்தி

ஆர்.எஸ்.எஸ். பாடத் திட்டத்தை அமுல்படுத்தினால், ‘சரசுவதி கடாட்சம்’ அம்புட்டுத்தான்.

• கட்டண முறை தரிசனம் பாகுபாடுகளை உண்டாக்குகிறது. -இராமகோபாலன்

அது சரி; கர்ப்பகிரக தரிசனம் பாகுபாட்டை உண்டாக்குகிறதே; அதைப் பற்றி பேச மாட்டீங்களா?

• 14 தமிழக அமைச்சர்கள் ஒரே குரலில் கூட்டாக பதவி ஏற்றனர். . - செய்தி

அமைச்சர்கள் பதவி நீக்கமும் கூட்டாகவே இருக்காது என்று நம்புவோமாக!

Pin It