மண்மொழி கடந்த சில இதழ்களில் ‘பகுத்தறிவின் மூட நம்பிக்கைகள்’ என்னும் தiப்பில் சில கட்டுரைகள் எழுத, அவை 32 பக்க அளவில் ஒரு குறு நூலாகவும் வெளி வந்துள்ளது மண்மொழி வாசர்கள் பலரும் அறிந்ததே. அக்கட்டுரைகளில் நாம் எழுப்பிய பல்வேறு வினாக்கள், செய்திகளில், இந்துத்துவ எதிர்ப்பு என்பதன் பேரால் ஒட்டு மொத்த இந்துக்களையுமே நாம் எதிர்க்க வேண்டாம். எதிர்த்து அவர் களை இந்துத்துவ அமைப்புகளை நோக்கி விரட்ட வேண்டாம். விரட்டி நாமும் அந்நியப்பட்டுப் போக வேண்டாம். இந்துக்களில் சனாதன இந்துவும் உண்டு, சனநாயக இந்துவும் உண்டு. எனவே இந்த சனநாயக இந்துவை நாம் அடையாளம் கண்டு ஆதரிக்க வேண் டும். அல்லாது அவர்களையும் எதிர்த்து அவர்களை அடிப்படைவாதிகள் பக்கம் விரட்டும் கைங்கர்யத்தைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண் டிருந்தோம். 

இதில் உள்ள நியாயத்தி னையோ அதன் நடைமுறைப் பொருத் தப்பாட்டையோ உள்வாங்க முயற் சிக்காத சிலர் ‘இந்துக்களில் போய் சனநாயக இந்துவா’ என்று எகத்தாள மாக கை கொட்டிச் சிரிக்காத குறையாக அவரவர் இதழ்களில் அல்லது மேடை களில் கேலி பேசுவதும், கிண்டலடிப் பதுமாகவே எதிர்வினை புரிந்து வரு கின்றனர். அதாவது மீண்டும் மீண்டும் எதையும் அறிவுப்பூர்வ ஆய்வுக்கும் சிந்தனைக்கும் உட்படுத்தாமல் உணர்ச்சி பூர்வ உசுப்பலுக்கும் கெக் கலிப்புக்கும் உள்ளாக்கும் முயற்சியாக வேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது இது. ஆகவே இதுபற்றி நியாயமான சிந்தனைக்கும் அறிவுபூர்வமான வாதத்திற்குமாக சில கேள்விகள். 

1) இசுலாமியர்களில் அடிப்படைவாதிகளும் உள்ளனர். சனநாயக வாதிகளும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் அப்படியே எதிர்க்கிறோமா, அல்லது அப்படியே ஏற்றுக் கொள் கிறோமா அல்லது சனநாயக வாதிகளை ஏற்று அடிப்படை வாதிகளை மட்டும் எதிர்க்கிறோமா?  

2) இதே போல கிறித்தவர்களிலும் அடிப்படைவாதிகளும் உண்டு, சனநாயகவாதிகளும் உண்டு. இவர்களையும் அனைவரையும் எதிர்க் கிறோமா அல்லது அப்படியே ஏற்றுக் கொள்கிறோமா அல்லது சனநாயக வாதிகளை ஏற்று அடிப்படைவாதி களை மட்டும் எதிர்க்கிறோமா? 

3) இதில் இவ்விரு மதத்திலும் அடிப்படைவாதிகளை மட்டும்தான் எதிர்க்கிறோம். சனநாயக வாதிகளை யெல்லாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது பதிலானால், இதே போக்கு, அணுகுமுறை இந்து மதத்துக்கு மட்டும் பொருந்தாதா என்பது தான் கேள்வி. 

இந்த அடிப்படையில் நாம் முதலில் கேட்க விரும்புவது இந்து மதத்தில் சனாதானிகளும் உண்டு, சனநாயக வாதிகளும் உண்டு என்பதை முதலில் ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லையா... இதை ஏற்க மறுப்பதானால், மற்ற எல்லாம் தங்களிலும் சனநாயக வாதிகள் உண்டு, இந்து மதத்தில் மட்டும் சனநாயக வாதிகள் இல்லை என்று நீங்கள் வாதிடுவதானால் இதற்கு நீங்கள் நிறுவும் சான்றுகள் என்ன? எந்த சான்றுகளும் தரவுகளும் இல்லாமல் சும்மா வெறுமனே ‘சனநாயக இந்து’ என்னும் கருத்தாக்கத்தைக் கிண்டலடிப் பதன் பொருள் என்ன? 

அதாவது எல்லா மதங்களிலும் உள்ள சனநாயக வசதிகளை எற்போம், ஆனால் இந்து மத்தில் உள்ள சனநாயக வாதிகளை மட்டும் ஏற்க மாட்டோம் என்பதுதானே இதன் பொருள். அதாவது இந்துத்துவ எதிர்ப்பு என்பதன் பேரால், அடிப்படைவாதிகளை மட்டும் எதிர்ப்பதற்கு மாறாக ஒட்டு மொத்த இந்துக்களையுமே எதிர்க் கிறீர்கள் என்பதுதானே பொருள். இப்படி எதிர்த்து எதிர்த்து இந்துக்கள் பலரையும் இந்துத்துவ அடிப்படை வாத அமைப்பு களை நோக்கி விரட்டி விட்டது தானே இதுவரை நீங்கள் கண்ட பலன். இது ஒருபுறம் இருக்க, சும்மா வெத்து வேட்டு உணர்ச்சிமய உசுப் பலுக்கு ஆட்படாமல் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். எல்லா மதங்களிலும் பல மனித நேய நற்போதனைகளும் உண்டு. மனித உரிமை மறுக்கும் சர்வாதிகார கெடுபிடிகளும் உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். 

இதில் எல்லாமத நற்கருத்துக் களையும் ஏற்று, எல்லா மத மனித உரிமை மறுப்புக் கருத்துகளையும் எதிர்க்க முற்படுவதுதானே உண்மை யான சனநாயகம், உண்மையான சமத்துவத்துக்கான முயற்சியாக இருக் கும். ஆனால் இதில் இசுலாம், கிறித் துவம் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்து மதம் மட்டும் தான் எனக்குக் குறி என்றால், அதிலும் ஒட்டுமொத்தமாக எல்லா இந்துக் களையுமே சகட்டு மேனிக்கு எதிர்ப்பேன் என்றால் இது எந்தவகையில் நியாயம் என்பது தான் கேள்வி இந்த தார்மீக ரீதியான கேள்வி ஒருபுறம் இருக்க, இதன் புறவிளைவு கள் இதுவரை என்ன மாதிரியான தாக்கங்களை விளைவித்து வருகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இத்துடன் இன்னொன்றையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். அதாவது இசுலாம், கிறித்துவ மதங்களை நோக்க ஒப்பு நோக்கில் இந்து மதம் சுதந்திரமானது, சனநாயகத் தன்மை மிக்கது. இது மனிதனை சாதிக் குள்ளடக்கி வைப்பதோடு, கெட்டி தட்டிப்போன, மாறாத அந்த அமைப் புக்குள் சிறைப்படுத்துவதோடு தன் பணியை முடித்துக் கொள்கிறது. அதன் மீறலைப் பற்றிக் கூட அது அதிகம் கவலைப்பட்டுக் கொள்வ தில்லை. அந்த அளவுக்கு தளர்வுக்கும், நெகிழ்ச் சிக்கு வழிவகுக்கும் தாராளத் தன்மை கொண்ட ஒரு பெருமதமாக இந்து மதம் திகழ்கிறது. 

ஆனால், பிற மதங்கள் அப்படி யல்ல. அதில் பிறப்பு முதல் இறப்பு வரை ஈமச்சடங்கு உள்ளிட்டு அனைத் தும் மதச் சட்டங்களாலேயே தீர்மானிக் கப்படுகின்றன. இந்து மதத்தில் இது எதையும் மீறலாம், மீற வாய்ப்புண்டு. மீறினாலும் கேட்க ஆளில்லை. மீறி விட்டால் பெரிய தண்டனையும் ஏதும் இல்லை. ஆனால் பிற மதங்களில் அப்படியல்ல. மதக்கோட்பாடுகளை நடைமுறைகளை மீறினால் மத நடவடிக்கைக்கு ஆளாக வேண்டும். அதேபோல இசுலாமியர் களுக்கு குரான்போல், கிறித்தவர் களுக்கு விவிலியம் போல இந்துக் களுக்கு கெட்டி தட்டிப்போன மாறாத இறுக்கமான கோட்பாட்டு நூல் எதுவும் கிடையாது. இந்துக்களுக்கு மனுவும் கீதையும் சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் காலாவதியான ஒன்று. இன்றைய பெரும்பான்மை யான இந்து தலைமுறைக்கு மனுவை யும் தெரியாது, கீதையும் தெரியாது. ஆனால் பிற மதங்கள் அப்படியல்ல. குரான் தெரியாமல், பைபிள் தெரியா மல் குறைந்தபட்ச அதன் போதனை களாவது தெரியாமல் யாரும் அந்த மதங்களில் இருக்க முடியாது. 

தவிர, நவீனகால சட்டப்பூர்வ சீர்திருத்தங்கள் எனப்படும் பலவும் இந்து மதத்திற்குள்ளேயே தான் நிகழ்ந்திருக்கின்றன. பிற மதங்களில் மதக் கோட்பாட்டு நோக்கில் அப்படிப் பட்ட சட்டப்பூர்வ திருத்தங்கள் எதுவும் செய்யப்பட்ட தில்லை. செய்யவும் முடி யாது. அந்தந்த மதங்களிலுமான இறுக்கம் அப்படி. அம்மதம் சார்ந்த மக்கள் நவீனகாலப் போக்கில் தாங்களாக சில நடை முறைகளைக் கடைப் பிடித்து தாங்களாகவே சில மாற்றங் களை உருவாக்கிக் கொள்கிறார்களே யன்றி, எதுவும் மதப்பூர்வ கோட்பாட்டு ரீதியான மாற்றமாக ஏற்கப்பட்டதில்லை. 

காட்டாக குடும்ப நலத்திட்டம் இசுலாமியத்தில் ஏற்புடையதல்ல. ஆகவே மத சட்டத்தில் அதுபற்றி எதுவும் திருத்தம் செய்ய முடியாது. ஆனால், சில இசுலாமியர்கள் தாங் களாக தங்கள் குடும்பத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயல்வது இயல்பாயிருக்கிறது. இவை இப்படித்தான் நடைமுறை யாகிறதே தவிர, மதக் கோட்பாடுகளில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் அல்ல. அதேபோல கிறித்துவத்தில் கருக்கலைப்பு மத விரோதம். இதுவும் நடைமுறையில் சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாக ஒளிவு மறைவாக சிலதை செய்து கொள்கிறார்களேயன்றி, மதக் கோட்பாட்டில் செய்யப்பட்ட திருத்தங் களின் மூலம் அல்ல. 

ஆனால் இந்து மதத்தில் அப்படியல்ல. இந்து மத அடிப்படைவாதக் கோட்பாடுகளைத் தகர்த்து எத்தனையோ சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு அவை நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இளம் வயதுத் திருமணத்தடை, மணமக்களுக்கு குறைந்தபட்ச திரு மண வயது நிர்ணயிப்பு, மணவிலக்கு பெறும் உரிமை, கைம் பெண் திருமணம், சாதி ஒழிப்பு, தேவ தாசி முறை ஒழிப்பு என இப்படிப் பல எண்ணற்ற சீர்த்திருத் தங்கள் இந்து மதத்தில் ஏற்பட்டுள்ளன. அல்லது செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சீர்த்திருத்தங்கள் எதையும் பிற மதங்களில் செய்ய முடி யாது. செய்ய அனுமதிக்கவும் மாட் டார்கள். எந்த மாற்றத்தையும் காலத் தேவைக்கேற்ப இவர்களாக உரு வாக்கிக் கொள்வார்களே தவிர, மதக் கோட்பாட்டு ரீதியாக அதில் மாற்றமோ திருத்தமோ செய்யமாட்டார்கள். செய்ய மதம் அனுமதிக்காது. 

இவை தவிர, பொதுவான பண் பாட்டு நோக்கிலோ, மனித உரிமை, சனநாயகம், சமத்துவம் என்கிற கோட்பாட்டு நோக்கிலோ எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அது எங்களைக் கட்டுப்படுத்தாது. அது எங்கள் மத நம்பிக்கைக்கு கோட்பாட்டுக்கு எதி ரானது என்று எதிர்ப்புக் குரல் கொடுப் பவர்கள் இவர்கள். இப்படி இருக்க இந்த வேறு பாடுகளையெல்லாம் மறந்துவிட்டு, மறுத்து விட்டு, இந்து மதத்தை மட்டும் முதன்மைப்படுத்தி விமர்சிப்பதும, தாக்குவதும் என்ன வகை சனநாயகம், சமத்துவம் என்பதுதான் கேள்வி. இப்படிக் கேட்டால், உடனே கேள்வி கேட்பவனை இந்துத்துவவாதி என்று குற்றம் சாட்டுவதோ, பழி சுமத்துவதோ தான் பதிலாயிருக்கிறதே தவிர, எழுப்புகிற கேள்விக்கு உரிய முறையில் தெளிவான பதில் வருவதில்லை. 

ஏதோ இந்துக்களைத் திட்டுகி றார்கள் என்பதற்காக உணர்ச்சி வயப் பட்டு எழுவதல்ல இந்த விவாதம், மறுப்பு எல்லாம். மாறாக இந்துத்துவ எதிர்ப்பு என்பதன் பேரால் எல்லா இந்துக்களையும் விமர்சித்து, சனநாயக இந்து உள்ளிட்ட அனைவரையும் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பு களை நோக்கி விரட்டு கிறார்களே இது நியாயமா. இது சமூக வளர்ச்சிக்கு அதன் சமத்துவத்திற்கும் சனநாயகத்திற்கும் எதிரானது இல்லையா என்கிற ஆதங்கத் திலிருந்து எழுவதே கேள்வி. ஆகவே இந்து மத எதிர்ப் பாளர்கள் இந்த கேள்வி குறித்து சிந்திக்கட்டும். இது மத எதிர்ப்புக்கும் இந்துத்துவ எதிர்ப்புக் கான வேறு பாட்டையும் உணர்ந்து செயல்படட்டும், படவேண்டும் என்பதே நம் வேண்டுகோள். 

Pin It