உலகப் புகழ் பெற்ற ஓவியராகத் திகழ்ந்து, சர்வதேச விருதுகளைச் குவித்த எம்.எப். உசேன் தனது 95வது வயதில் லண்டனில் ஜூன் 9 ஆம் தேதி மரணமடைந்தார். ஓவியரின் கற்பனையாற்றலில் உருவான படைப்புகளுக்கு இந்துத்துவ சக்திகள் மதச் சாயம் பூசி விலை மதிக்க முடியாத அவரது ஓவியக் கூடங்களை சிதைத்தனர். இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் என்று குற்றம் சாட்டினர். கஜீரோ, கோனாரக் குகைகளில் இந்து கடவுள் சிற்பங்கள் நிர்வாணமாக செதுக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத இந்து மதவெறி சக்திகள், உசேன் மீது மட்டும் பாய்ந்தன. காரணம் - அவர் பிறப்பால், ஒரு இஸ்லாமியர் என்பதால்தான். நீதி மன்ற வழக்குகளால அலைக்கழிக்கப்பட்டு, பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளி நாடு களில் அடைக்கலம் தேடி அந்த உன்னதமான கலைஞன் ஓட வேண்டியதாயிற்று. ‘கத்தார்’ நாடு அவருக்கு குடிஉரிமை வழங்கியது. லண்டனில் தனி  மனிதராக வாழ்ந்த அந்தக் கலைஞர், பிறந்த மராட் டியத்துக்கு திரும்ப முடியவில்லையே என்ற கவலை யுடன் விடைபெற்றுக் கொண்டார். இந்துத்துவ சக்திகள் கருத்து சுதந்திரத்தில் மேல் நடத்திய இந்த தாக்குதல் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது.

Pin It