பெரியார் பெருந்தொண்டரும், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியாளர்களின் முன்னோடியுமான டாக்டர் புரபசர் கே.ஆர். குமார், 19.2.2011 அன்று இயற்கையெய்தினார். 2.6.2011 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், கும்பகோணம் ஒன்றியம் திருவஞ்சுழியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தனர்.
பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை நா. இராமாமிர்தம் 24.5.2011 அன்று இயற்கை யெய்தினார். 1.6.2011 அன்று சீனிவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் தெரிவித்தார்.

‘வாசகர் வட்டம்’ மாணிக்க. சண்முகம் முடிவெய்தினார்

‘பெரியார் நூலக வாசகர் வட்ட’ மாணிக்க. சண்முகம் (84) அவர்கள், 9.5.2011 அன்று சென்னையில் முடிவெய்தினார். மத்திய தணிக்கைத் துறையில் தலைமை கணக்காளராகப் பணியாற்றியவர். தமது பணிக் காலத்திலேயே பெரியார் அண்ணா கொள்கைகளைப் பரப்புவதில் தீவிரமாக செயல்பட்டவர். நகர இளைஞர் கழகம், நண்பர்கள் கழகம், சுய சிந்தனை யாளர் பேரவை போன்ற அமைப்புகள் வழியாக பகுத்தறிவு - திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பிய அவர், 1976 இல் உருவாக்கிய பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, ஒவ்வொரு வியாழக்கிழமையும் விடாது, பெரியார் திடலில் கூட்டங்களை நடத்தி சாதனை புரிந்தவர். பெரியார் திராவிடர் கழகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்தை விடாமல் படித்து, அவ்வப்போது கருத்துகளைப் பகிர்ந்து வந்தவர். இறுதிக் காலம் வரை கொள்கை அடையாளத்தோடு வாழ்ந்து காட்டிய பெருமை அவருக்கு உண்டு. கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பொறுப்பாளர்கள் தபசி. குமரன், கேசவன், அன்பு தனசேகரன், அண்ணாமலை மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதி தோழர்கள், பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யம்) அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

Pin It