ஒட்டன் சத்திரம், மேட்டூர், கோவை, திருப்பூர் பகுதிகளில் தீண்டாமையைப் பின்பற்றும் தேனீர்க் கடைகள், கோயில்கள், சுடுகாடுகளின் பெயர்களை இங்கு வெளியிடு கிறோம். காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு உறக்கம் கலைந்து, நடவடிக்கை எடுக்குமா?

கோவை திருப்பூர் மாவட்டம் 

 

1. சதீஸ் தேனீர்கடை

மல்லேகவுண்டம்பாளையம்

பல்லடம் வட்டம்

திருப்பூர் மாவட்டம்.

 

2. செட்டியார் தேனீர்கடை

சின்னப்புத்தூர்

சுல்தான்பேட்டை ஒன்றியம்

சூலூர் வட்டம்

கோவை மாவட்டம்.

 

3. 3 கடைகள்

த.கிருஷ்ணாபுரம்

சுல்தான்பேட்டை ஒன்றியம்

சூலூர் வட்டம்

கோவை மாவட்டம்.

 

4.கவுண்டர் தேனீர்கடை & உணவகம்

சின்னப்புத்தூர்

சுல்தான்பேட்டை ஒன்றியம்

சூலூர் வட்டம்

கோவை மாவட்டம்.

 

5.கவுண்டர் தேனீர்கடை

சாலைப்புதூர்

குடிமங்கலம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்.

 

6. 2 தேனீர்கடைகள்

மூங்கில்தொழுவு பிரிவு

மடத்துக்குளம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்.

 

7.ஊர் தேனீர்கடை

செஞ்சேரிப்புத்தூர்

சுல்தான்பேட்டை ஒன்றியம்

சூலூர் வட்டம்

கோவை மாவட்டம்.

 

8.பாலு உணவகம்

கரடி வாவி

பல்லடம் வட்டம்

திருப்பூர் மாவட்டம்.

9.ஊர் தேனீர்கடை

குள்ளம்பாளையம்

பல்லடம் வட்டம்

திருப்பூர் மாவட்டம்.

 

10. பழனிச்சாமி தேனீர்கடை

வெங்கிட்டாபுரம்

பல்லடம் வட்டம்

திருப்பூர் மாவட்டம்.

 

11. 3 தேனீர்கடைகள்

மாதப்பூர்

பொங்கலூர் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்.

 

12. அய்யிறு தேனீர்கடை

தாயம்பாளையம்

பொங்கலூர் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்.

 

13. பள்ளிக்கூட பக்க தேனீர்கடை

சேமலைகவுண்டம்பாளையம்

பொங்கலூர் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

14. 3 தேனீர்கடைகள்

வலுப்புரம்மன்கோவில்

பொங்கலூர் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

15. தேனீர்கடை

கண்டியன்கோவில்

பொங்கலூர் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்.

 

16. நாகராஜ் தேனீர்கடை

பள்ளிக்கூடம் அருகில்

நல்லூர்பாளையம்

சுல்தான்பேட்டை ஒன்றியம்

கோவை மாவட்டம்

 

17. ஊர் தேனீர்கடை

வல்லகுண்டாபுரம்

உடுமலை ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்.

 

18. மெடிக்கல்ஸ் அருகே உள்ள தேனீர்கடை

வா.அய்யம்பாளையம்

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

19. ஊர் தேனீர்கடை

நாகம்மாபுதூர்

அன்னூர் ஒன்றியம்

கோவை மாவட்டம்

 

20. தேனீர்கடைகள்

தொங்குட்டிபாளையம்

பொங்கலூர் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

21. அம்மன் டீ காபி நிலையம்

நால்ரோடு

பொல்லிகாளிபாளையம்

பொங்கலூர் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

22. ஸ்ரீசக்தி தேனீர்கடை,

டிபன் சென்ட்டர்

கணபதி பாளையம்

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

23. ஜே.பி.ஆர். தேனீர்கடை

மாதேஸ்வரா நகர்

கணபதி பாளையம்

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

24. வெள்ளிங்கிரி தேனீர்கடை

காளிவேலம்பட்டி

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

25. பஸ்ஸ்டாப் தேனீர்கடை

கரடிவாவிபுதூர்

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

26. வஞ்சியம்மன் உணவகம்

செம்மிபாளையம்

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

27. கோவில் தேனீர்கடை, உணவகம்

செம்மிபாளையம்

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

28. பஸ்ஸ்டாப் தேனீர்கடை

காடாம்படி

சூலூர் வட்டம்

கோவை மாவட்டம்

 

29. தேனீர்கடைகள்

செங்கத்துறை

சூலூர் வட்டம்

கோவை மாவட்டம்

 

30. ஊர் தேனீர்கடை

அப்பநாயக்கன்பட்டிபுதூர்

சூலூர் வட்டம்

கோவை மாவட்டம்

 

31. பஸ்ஸ்டாப் தேனீர்கடை

சித்தநாயக்கன்பாளையம்

சுல்தான்பேட்டை ஒன்றியம்

கோவை மாவட்டம்

 

32. ஊர் தேனீர்கடை, உணவுவிடுதி

நல்லகட்டிபாளையம்

புதுவம்பள்ளி பஞ்சாயத்து

சூலூர் வட்டம்

கோவை மாவட்டம்

 

33. ஊர் தேனீர்கடை

நல்லூர்பாளையம்

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

34. ஊர் தேனீர்கடை

மலையப்பாளையம்

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

35. ஊர் தேனீர்கடை

கேத்தனூர்

பொங்கலூர் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

36. மாணிக்கராஜ் தேனீர்கடை

இச்சிபட்டி

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

37. கலைவாணி தேனீர்கடை

இச்சிபட்டி, பல்லடம் ஒன்றியம், திருப்பூர் மாவட்டம்

38. பஸ்ஸ்டாப் தேனீர்கடை

பெத்தாம்பூச்சிபாளையம்

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

39. ஊர் தேனீர்கடை

அனுப்பட்டி

பல்லடம் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம்

 

40. கவுண்டர் தேனீர்கடை

கல்லம்பாளையம்

பல்லடம் நகராட்சி

திருப்பூர் மாவட்டம்

 

மேட்டூர் நகரம் (சேலம் மாவட்டம்)

பொன்னுசாமி தேனீர்கடை

பெரும்பள்ளம்.

 

கீதா தேனீர்கடை

அம்மாபேட்டை.

 

மோகன் தேனீர்கடை

அம்மாபேட்டை

 

அம்மன் பேக்கர்ஸ்

அஞ்சலக பேருந்து நிறுத்தம்

அம்மாபேட்டை.

 

மோகன் தேனீர் நிலையம்

சிங்கம்பேட்டை கேட்.

 

பிரகாசு டிபன் சென்டர்

சிங்கம்பேட்டை பள்ளி அருகில்.

 

தம்பிபேக்கரி

கோனேரிப்பட்டி.

 

தம்பி பேக்கரி

பூவாம்பட்டி ரேசன் கடை அருகில்.

 

தம்பி பேக்கரி

பூவாம்பட்டி காவல்நிலையம் அருகில்.

 

தேனீர்கடை

நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகில்.

 

தேனீர் கடை

யூனியன் ஆபீஸ் எதிர்புறம்

அம்மாபேட்டை.

 

ஒட்டன்சத்திரம் ஒன்றியம்

 

லெக்கையன் கோட்டை - தலித்துகள் தெருக்களில் நடக்க அனுமதி இல்லை

அரங்கநாதபுரம் - இரட்டை சுடுகாடு

புது அந்திக்கோம்பை

சவடமுத்து தேனீர்கடை, கருணாகரன் தேனீர்கடை - இரட்டைக் குவளை, இருக்கையில் அமர அனுமதி மறுப்பு, ஒரு குறிப்பிட்ட தெருவில் செருப்புஅணிந்து நடக்க அனுமதி மறுப்பு, இங்குள்ள காளியம்மன் கோவிலில் தலித்துகள் வழிபட அனுமதி மறுப்பு, இரட்டைச் சுடுகாடுகள். 

சாலைப்புதூர் - இங்குள்ள காளியம்மன் கோவில்களில் நுழைய அனுமதி மறுப்பு 

கே. அந்திக்கோம்பை - இங்குள்ள காளியம்மன் கோவில்களில் உள் நுழைவு இல்லை. இரட்டை சுடுகாடு. 

காளாஞ்சிபட்டி - தலித்துகள் ஒரு பகுதியில் செருப்பு அணிந்து நடக்க அனுமதி இல்லை. ஒரு பகுதியில் தெருவில் நுழைய அனுமதி இல்லை. 

வெரியப்பூர் (மாநில காவல் இணை இயக்குநர் ரவி ஐ.பி.எஸ். சொந்த ஊர்) - இங்குள்ள கலையரங்கத்தில் தலித்துகள் அமர அனுமதி இல்லை பிள்ளையார், காளியம்மன் கோவில்களில் உள் நுழைய அனுமதி மறுப்பு. அஞ்சகலத்தின் அஞ்சற்காரராக பணிபுரிபவர். தலித் என்பதால் கீழே கோணி பையை விரித்து அமர்ந்து பணி புரிகிறார். அஞ்சல் அலுவலகராகப் பணி புரியும் உயர்சாதி இந்து, அவரை அலவலகத்தில் நாற்காலியில் அமர அனுமதிப்பது இல்லை. இங்கு சுடுகாடுகளும் இரண்டு. அவை அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்பட்டது. 

சவ்வாதுபட்டி - காளியம்மன், மாரி யம்மன் கோவில் வழிபட மறுப்பு

தண்டபாணி தேனீர்கடை - இரட்டை இருக்கை - இரட்டை சுடுகாடு - முடித்திருத்தகத்தில் முடிவெட்டுவதில்லை. கலையரங்கத்தில் உட்கார அனுமதி இல்லை. 

இடையகோட்டை கல்லுப்பட்டி நாயக்கர் தெருவில் தலித்துகள் செருப்பு அணிந்து நடக்கத் தடை 

கொல்லபட்டி - சண்முகம் தேனீர்கடை, ரங்கசாமி தேனீர்கடை, நாயக்கர் (மாட்டு வியாபாரி) தேனீர்கடை - இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை, இரட்டைச் சுடுகாடு, காளியம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. 

சிரங்க கவுண்டன்புதூர் - குப்புசாமி தேனீர்கடை, இராசு தேனீர்கடை - இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை, இரட்டைச் சுடுகாடு, தலித்துகளுக்கு சுடுகாடு இல்லை. காளியம்மன், குப்பணசாமி கோவிலில் நுழைய அனுமதி இல்லை. 

தங்கச்சியம்மாபட்டி - துக்கையம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. 

நீலமலைக்கோட்டை - முத்தாலம்மன் கோவில், காளியம்மன் கோவில் நுழைய அனுமதி இல்லை. 

குப்பாயிவலசு - கள்ளிமந்தயம் - செல்லமுத்து தேனீர்கடை, கோழிக்காரர் தேனீர்கடை - இரட்டைக் குவளை, காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை. மிதிவண்டியில் செல்ல அனுமதி இல்லை. 

பொருளூர் - கள்ளிமந்தயம் - மகாலட்சுமி தேனீர்கடை, ஆண்டவர்தேனீர்கடை, தெண்டனை தேனீர்கடை வையம்பட்டி தேனீர்கடை, கொத்தயத்துக்காரர் தேனீர்கடை, ஆறுமுகம் தேனீர்கடை, முத்துக் கல்யாணி தேனீர்கடை, புளியம்பட்டிக்காரர் தேனீர்கடை, வஞ்சத்தாள் தேனீர்கடை, கணேஷ் ஓட்டல் - இரட்டைக் குவளை, உணவகங்களில் கீழே அமர்ந்து உண்ண வேண்டும். காளியம்மன் கோவில், மங்கையம்மன் கோவில், பெருமாள் கோவில் - அனுமதி இல்லை. இரட்டைச் சுடுகாடு. 

கள்ளிமந்தயம் - காளியம்மன், விநாயகர், கன்னிமார், மாயமான், கோவில்களில் நுழைய அனுமதி இல்லை. - சுடுகாடு மூன்று - தலித்துகள் - செட்டியார் - கவுண்டர் என்று தனித்தனியாக. 

ஐ. வாடிப்பட்டி - கள்ளிமந்தயம் - சுப்பிரமணி தேனீர்கடை, முத்துச்சாமி தேனீர்கடை, செல்லக்குமார் தேனீர்கடை - இரட்டைக் குவளை, காளியம்மன், மாரியம்மன், விநாயகர் கோவில்களில் நுழைய அனுமதி இல்லை. - இரட்டைச்சுடுகாடு. 

ஈசகாம்பட்டி - கள்ளிமந்தயம் - பாஸ்கரன் தேனீர்கடை, காளிதாஸ் தேனீர்கடை, சுவாமிநாதன் மைத்துனர் தேனீர்கடை (செட்டியார்). காளியம்மன், துர்க்கையம்மன், விநாயகர் கோயிலில் நுழைய அனுமதி இல்லை. - இரட்டைச் சுடுகாடு. 

நீலாகவுண்டன்பட்டி - கள்ளிமந்தயம் - அங்காளம்மன், விநாயகர் கோயிலில் நுழைய அனுமதி இல்லை. 

புங்கவலசு - கள்ளிமந்தயம்

(தமிழக அரசு கொறடா சக்கரபாணி சொந்த ஊர்)

விநாயகர் கோயிலில் நுழைய அனுமதி இல்லை. 

பருமருத்துப்பட்டி - பெருமாள், தும்மிசியம்மன், முத்தாளம்மன், பாட்டகேஸ்வரர் ஆகிய கோயிலில் நுழைய அனுமதி இல்லை.

பட்டியல் தயாரிப்பு: கழகத்தின் களப்பணிக் குழுவினர் 

Pin It