நாவல் மரங்கள் மிகுவாகச் செழித்து அடர்ந்திருந்த பொழிலாகப் பண்டைய இந்தியா இருந்தமையின் -அக்கால் இது “நாவலந்தீவு” என்னப் பெற்றது.
"நாவலந் தீவே.... ...... எனத் தீவேழே
ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்" (திவாகரம்]
1. பனிமலையும் வட இந்தியாவும் இல்லாத முந்தைய பகுதி
2. பனிமலையோடு கூடிய இந்தியாவும் பழம்பாண்டி நாடும் இருந்த ஒட்டுமொத்தப் பகுதி
3. பழம் பாண்டி நாடு இல்லாத இந்தியா என முத்நிலைகளைக் கொண்டது “நாவலந்தீவு” இல்லாத இந்தியா என அவர்கள். (காண்க: பாவாணரின் தமிழ் வரலாறு: பக்: 3)
நாவலந்தீவு : நாவலந்தீ வாள்வாரே நன்கு" (ஏலாதி. 56)
நாவலந்(தீவு + அம்) > தீவம் = நாவலந்தீவு
"நாவலந் தீவம் போற்றி" (திருவாலவா. கடவு:8)
நாவல் + அகலிடம் > நாவல்கலிடம் = நாவலந்தீவு
"நாவலகலிடத்து ஞாயிறனையாய்" [பு.வெ:8:17]
நாவல் + பொழில் > நாவற்பொழில் = நாவலந்தீவு “பூமலி நாவற் பொழிலகத்து” [பு.வெ:9:38]
நாவல் + அம் + தண் + பொழில் நாவலந் தண்பொழில் = நாவலந்தீவு
"நாவலந் தண்பொழில் வீவு இன்று விளங்க" (பெரும்: 465)
[நச்சினார்க்கினியர் உரை: நாவலாற் பெயர்பெற்ற அழகினையுடைய குளிர்ந்த உலகமெல்லாம் கேடின்றாக விளங்கும்படி ...]
" நாவலந் தண்பொழில் மன்னர்" (சிலம்பு: 17:1 -3) (உரை: நாவலந் தீவிலுள்ள ஏனைய அரசர்களும்...] நாவல் மரங்களின் செறிவிடம் என்னும் பொருட்காரணமாகவே "நாவலந்தீவு" என்னும் பெயர் சூட்டப் பெற்றது என்பதை -"நாவல்"
தழீஇய நானிலம் "[திருக்கோ: 19] நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து" [மணி: 11:107],"
நாவல் ஓங்கிய மாபெருந் தீவத்து" [மணி: 2:1] என்றவாறு பல்வேறு குறிப்புகள் மெய்ப்பிக்கின்றன.
'யா" என்னும் கருமைக்கருத்து மூலவழியே [யா>யா+அம்> யாம் > யாம்+பு >யாம்பு>] சாம்பு என்றவாறு நாவல் மரத்தைக் குறித்துத் தமிழ் மக்களின் வழக் சொல்லைத் தம் வேதமொழிக்கும். Jambu" என்ற ஒலிப்பமைப்பில் திரித்துப் பதித்துக் கொண்டனர்.
யா > யாஅம் > யாம் > யாம்+பு > யாம்பு > சாம்பு
சம்பு+அல்> சாம்பல் = எரிபட்டுக் கரிதாகிய நீறு
சுடுகாடான சாம்பல் அரங்கத்திலே" (புறப்பொருள் வெ: 9:43: உரை]
சாம்பல் >சாம்பர் [லகர ரகரத் திரிபு]
(ஒ.நோ: குடல் > குடர்
பந்தல் > பந்தர்
சாம்பர் = சாம்பல்
"சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி" [தேவா: 967:4]
யாம்பு > சாம்பு = கரிய கனிகளையுடையதாகிய நாவல்மரம்
சாம்பு =நாவல் [தைலவருக்கச் சுருக்கம்)
மேலுங்காண்க: சாம்பு + அல்>சாம்பல் = நாவல் (மலையகராதி)
சாம்பு> (சம்பு) (skt) jambu
[நாவலைக் குறித்த] "சாம்பு" என்பதன் சமற்கிருதத் திரிபான Jambu" என்னும் சொற்கொண்டு-நாவலந்தீவை "Jambu-dvipa என்றவாறும் குறிக்கலாயினர்!
[ தீர்வு > தீவு > (skt) dvipa]
- யா நூலிலிருந்து..
- சொல்லாய்வு அறிஞர் அருளியார்