உலகப் பாட்டாளிகளின் தலைவனே! உன்னத

மனிதநேயனே, காரல் மார்க்ஸே!! எங்கு சென்றீர்?

எங்களை விட்டுவிட்டு?

உங்கள் அருமை உயிர்த் தோழன் எங்கெல்ஸையும் ஏன்

அழைத்துச் சென்று விட்டீர்?

நீங்கள் காண விரும்பிய

பொன்னு உலகத்தை, இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி

வர்க்கத்தை அணிதிரட்டி,

அயோக்கிய முதலாளித்துவத்தை,

அகராதியிலிருந்து தகர்த்தெரிய,

விஞ்ஞான இயங்கியலை, மார்க்சிய தத்துவத்தை,

உழைக்கும் மக்களுக்குளித்து விட்டு, மறைந்தது ஏனோ?

சோசலிச கட்டுமானத்தை, முதன்முதலாக உலக்களித்த

உண்மையான புரட்சித் தலைவர்கள்,

லெனின் ஸ்டாலின் மாவோ

ஹோசி மின் ஐ யும் அல்லவா அழைத்துச் சென்று

விட்டீர்கள்?

ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்?

எப்போது வருவீர்கள்?

ஏனெனில் எங்கள் குறைதீர்க்க,

வீரத்தின் விளை நிலங்களான தமிழ்நாட்டின் தமிழரான

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரையும்,

சீக்கியனாக பஞ்சாப்பில் பிறந்த சிங்ககுட்டியான பகத்

சிங்கையும், இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில்

பறிகொடுத்துவிட்டு,

பராரியாக

பாசிச பயங்கரவாத பெருச்சா லிகளின் ஆட்சியில்

சிக்கித் தவிக்கிறமோ,

எங்கள் நிலையைக் கண்டு,

ஏன் இன்னும் வரவில்லை?

எங்களுக்கேன் விடிவில்லை?

ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்?

எப்போது வருவீர்கள்?

ஏனெனில் எங்கள் குறைத் தீர்க்க

ஏற்றமிகுத் தலைவன் இங்கில்லை?

எண்ணிப்பார்க்கும்போது, எண்ணிலடங்காத் தவறுகள்

இழைத்துவிட்டோமென்று, உணரும்போது,

எண்ணிக்கையிலடங்காத போலிகள்

காளான்கள் போல் முளைத்திருந்தன!

சாதி ஆணவப்படுகொலையை, தீண்டாமையை,

இந்துத்துவ மதவெறி பார்ப்பனீய பயங்கரவாதிகளை,

கார்ப்பரேட் ஏகாதிபத்திய கழுகுகளை எதிர்த்து,

அடட்டைக்கத்தி வீரர்கள் தான்,

உண்ணாவிரதம், அகிம்சை,

அரை நிர்வாண, காத்திருப்பு போரை,

கூட்டணி அரசுடன் நடத்துகிறார்கள்!

போலி மார்க்சியம் பேசும் புல்லுருவிகள்

மாமேதையை அடகு வைக்கிறார்கள் சிலைவடிவில்!

சிங்காரச் சென்னையில், சீர்மிகு கன்னிமாரா நூலகத்தில்,

சிந்தனையாளர்

காரல் மார்க்ஸை சிலையாய் நிர்மாணிக்க,

சீற்றத்துடன் சிலை அமைப்புக்குழுத் தோழர்கள்,

சிட்டெனப் பறந்துப் பறந்து,

ஆதரவு தேடித்

தேடி, அனைத்துக்கட்சித் தலைவர்களை

அடிக்கடிச் சந்தித்து,

சால்வை அணிவித்து, ஆளும் அரசை நிர்பந்திக்க,

வரப்பிரசாதமாய் தேர்தல் நெருங்க,

அடித்தது ஜாக்பாட் பரிசு,

அரசுக்கும், போலிகளுக்கும் மார்க்ஸ் சிலை வடிவில்?

மார்க்ஸ் சிலையை பெற்றெடுத்ததோ,

மார்க்ஸ் தலைமையிலான, சிலையமைப்புக்குழு!

ஆனால் தட்டிப் பறித்ததோ, போலிகளின் குழு!!

சிலையமைப்பு விசயத்திலே,

பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும், பெருந்தன்மையும்

இல்லையென்றால்,

திரிபுராவிலும், மேற்கு வங்கத்திலும்

இன்னும் எத்தனை, எத்தனையோ?

- ப. தமிழ் நேயன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.