இந்தியாவில் ஊழல், லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலும், லஞ்சமும் இந்திய சனநாயகத்திற்கு சவால் விடுகிறது. மேலும் இந்திய நாட்டின் பொருளாதார, தொழில், விவசாய வளர்ச்சிக்கும், சமூக நெறிகளுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் எதிராக லஞ்சமும், ஊழலும் விளங்குகிறது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் முதலிய மக்கள் விரோத கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட நாடுகளொல்லாம் ஊழல் மயமாகியுள்ளது. மேலும், ஊழலை ஊக்கப்படுத்தி வளர்க்கிறது; அனைத்து துறைகளிலும் ஊழலை பெருக்குகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் முதலியவற்றிற்கு வரிச் சலுகை அளிப்பதிலும், நிலங்களை வழங்குவதிலும் பல்லாரயிரம் கோடி ரூபாய் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக வழங்கப்படுகிறது.

Indira Gandhi and Nehru

மக்களாட்சியின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட முதலாளித்துவ கட்சிகள் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைக்கின்றன. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும், தொலைநோக்கு பார்வை இல்லாததும் அரசியல்வாதிகளுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. லஞ்சம் வாங்குகின்றவன், ஊழல் செய்கின்றவன் பிழைக்கத் தெரிந்தவன் என்று மக்களை நம்ப வைக்கின்றனர். லஞ்சம் வாங்கத் தெரியாதவன், ஊழல் செய்யாதவன் பிழைக்கத் தெரியாதவன் என்ற கருத்து சமூகத்தில் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் லஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல் உள்ளவர்களால் தான் உலகம் பிழைத்துத் கொண்டிருக்கிறது என்ற உண்மை புறந்தள்ளப்படுகிறது. மீன் குஞ்சு எப்படி நீரைக் குடிக்கிறது என்பது அறிய இயலாது, அதுபோல் அரசியல்வாதிகள் , அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை , ஊழல் செய்வதை, கையாடல் செய்வதை கண்டுபிடிக்க முடியாது என அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் கௌடில்யர் கூறியுள்ளார். இக்கருத்து இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது.

மீன் விற்ற காசு நாறுவதில்லை, நாய் விற்ற காசு குரைப்பதில்லை என்பது தமிழகத்தன் பழமொழிகள், இந்தப் பழமொழிகளை அடிப்படையாகக் கொண்டு லஞ்சமும், ஊழலும் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 1957 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு பிரதமராக பதவி வகித்தபோது முந்திர ஊழலால் இந்திய பாராளுமன்றம் அமளி துமளியானது ஜவகர்லால் நேரு பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். தமிழகத்தில் இருந்து மத்தியில் நிதி அமைச்சராக பதவி வகித்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார். இந்தியாவின் பிரதமராக இந்திரகாந்தி அம்மையார் பதவி வகித்த போது 1971 ஆம் ஆண்டு நகர்வாலா ஊழல், மாருதி கார் தொழிற்சாலை ஊழல் முதலிய ஊழல்களால் இந்திரகாந்தி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இந்திய ஆட்சியளர்கள் 1992 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமல்படுத்திவரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஊழல் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. அந்த ஊழல்களில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் ஈடுப்பட்டுள்ளது என்பதை கீழ்க்கண்ட பட்டியல் கூறும்.

1. 1987 போர்ஃபர்ஸ் ஊழல் , பேர்பாக்ஸ் ஊழல் - ரூ. 260 கோடி

2. 1992 ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் - ரூ. 5000 கோடி

3. 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல் - ரூ. 650 கோடி

4. 1995 பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ. 5000 கோடி

5. 1995 யூகோய்லேவ் டைனர் ஊழல் - ரூ. 400 கோடி

6. 1995 - காஸ்லாவ் விருந்து ஊழல் - ரூ. 400 கோடி

7. 1995 - மேகாலயா வன ஊழல் - ரூ. 300 கோடி

8. 1996 உர இறக்குமதி ஊழல் - ரூ. 1300 கோடி

9. 1996 யூரியா ஊழல் - ரூ. 133 கோடி

10. 1996 பீகார் மாட்டுத் தீவன ஊழல் - ரூ. 990 கோடி

11. 1997 சுக்ராம் டெலிகாம் ஊழல் - ரூ. 1500 கோடி

12. 1997 - எஸ்.என்.சி. லாவலைன் மின்சாரத் திட்ட ஊழல் - ரூ. 374 கோடி

13. 1997 பீகார் நில ஊழல் - ரூ. 400 கோடி

14. 1997 சி.ஆர். பான்சால் பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ. 1200 கோடி

15. 1998 தேக்கு மர வளர்ப்பு ஊழல் - ரூ. 8000 கோடி

16. 2001 யு.டி.ஐ. ஊழல் - ரூ. 4800 கோடி

17. 2001 தினேஸ் டால்மியா பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ.595 கோடி

18. 2001 கேதான் பரேக் செக்யூரிட்டி ஊழல் - ரூ. 1250 கோடி

19. 2001 வீரேத்திர ரஸ்ட்டதி உலக அளவில் ஊழல் - ரூ. 1 பில்லியன் வரை

20. 2002 சஞ்சய் அகர்வால் ஹோமிராடு ஊழல் - ரூ. 600 கோடி

21. 2003 டெல்க்கி பத்திரபபேர ஊழல் - ரூ. 172 கோடி

22. 2003 பிரமோத் மகாஜன் - டாடா விஎஸ்என்எல் ஊழல் - ரூ. 1200 கோடி

23. 2005 ஐ.பி.ஓ.டி. மாட் ஊழல் - ரூ. 146 கோடி

24. 2005 பீகார் வெள்ள நிவாரண ஊழல் - ரூ. 17 கோடி

25. 2005 - ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ. 18, 979 கோடி

26. 2006 பஞ்சாப் சிட்டி சென்ட்டர் ஊழல் - ரூ. 1500 கோடி

27. 2006 தாஸ்காரிடார் ஊழல் ரூ. 175 கோடி

28. 2008 பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ஊழல் - ரூ. 50,000 கோடி

29. 2008 சத்யம் ஊழல் - ரூ. 10, 000 கோடி

30. 2008 ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல் - ரூ. 513 கோடி

31. 2008 ராணுவ ரேசன் ஊழல் - ரூ. 5000 கோடி

32. 2008 - ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஸ்ட்ரா ஊழல் - ரூ. 95 கோடி

33. 2009 - ஜார்க்கண்ட் மருத்துவ சாதனங்கள் ஊழல் - ரூ. 130 கோடி

34. 2009 அரிசி ஏற்றுமதி ஊழல் - ரூ. 2500 கோடி

35. 2009 ஒரிசா சுரங்க ஊழல் - ரூ. 7000 கோடி

36. 2009 மதுகோடா சுரங்க ஊழல் - ரூ. 37000 கோடி

37. 2010 எல்.ஐ.சி. வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல்

38. 2010 மும்பையில் ராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஆதர்ஷ் ஊழல்

39. 2010 புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊழல்.

40. 2010 ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல்

41. 2011 - 2 ஜி ஸ்பெக்டராம் ஊழல் - ரூ. 1,76,000 கோடி.

42. 2012- வக்பு வாரிய நிலமோசடி ஊழல் - ரூ. 200000 கோடி

43. 2012 இந்திய நிலக்கரி சுரங்க ஓக்கீட்டு முறைகேடு ஊழல் - ரூ. 185591 கோடி

44. 2012 உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் - ரூ. 10000 கோடி

45. ஹவாலா நிதி முறைகேட்டில் 18 மில்லியன் டாலர் ஊழல்.

46. தங்க நாற்கரச் சாலை அமைக்கும் திட்டத்தில் நில மோசடியில் 100 மில்லியன் டாலர் ஊழல்.

47. கார்கில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத்பவாரும் சம்பந்தப்பட்ட பாசனக் கால்வாய் திட்ட மோசடியில் ரூ 75,000/- கோடி ஊழல்.

48. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வராக இருந்த எடியூரப்பா இரும்புத் தாது வெட்டி எடுப்பதில் ரூ 50 கோடி ஊழல்.

49. கோவாவில் பாரதீய ஜனதா கட்சி முதல்வர் பணிக்கர் அரசின் இரும்புத் தாது ஊழல் ரூ 25 கோடி ஊழல்

50. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அர்ஜூன் முண்டா மற்றும் மதுகோடாவின் கனிம ஊழல் ரூ 37 ஆயிரம் கோடி ஊழல்.

51. சத்தீஸ்கரில் கனிம வளங்களை வெட்டி எடுக்க ஒப்பந்தம் வழங்குவதில் மற்றும் மின் திட்டங்களில் ராமன்சிங் அரசு செய்த முறைகேடு ரூ 40 ஆயிரம் கோடி ஊழல்.

52. கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மாசுவராஜ் பெற்றது ரூ 1500 கோடி ஊழல்.

அனைத்திற்கும் மேலாக நரேந்திர மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் அலுமினா சுத்தகரிப்பு ஆலைக்கு நிலம் குத்தகைக்கு வழங்குவதில் செய்த நிதி மோசடி ஊழல்.

மேற்கண்ட ஊழல்கள் தவிர மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் முதலியவற்றுடன் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும்போது இந்தியாவின் பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர்அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மதிப்பீட்டு தொகையில் 25 விழுக்காடு லஞ்சமாக பெறுகின்றனர். பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம், நபார்டு சாலை மேம்பாட்டு திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டம், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டம் முதலியவைகளிலும் மேற்கண்ட நபர்கள் லஞ்சம் பெறுகின்றனர்.

இந்தியாவில் லஞ்சத்திலும், ஊழலிலும் புரளும் பணத்தைக் கொண்டு இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக தரமான மருத்துவமனைகள் அமைக்க முடியும். இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்து சுத்திகரிப்பு செய்து நீர்பாசனத்தை பெறுக்கி விவசாயத்தை மேம்படுத்த முடியும். விவசாயிகளின் விவசாயக் கடன்களையும், மாணவர்களின் கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்க முடியும். இந்தியாவில் உள்ள வீடற்ற ஏழை மக்களுக்கு தரமான பாதுகாப்பான வீடு கட்டி வழங்கு முடியும். இந்தியாவில் உள்ள அனைத்த கிராம, நகர மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியும். அண்மையில் பி.பி.சி. நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகத்தில் லஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. இது இந்திய மக்களுக்கு , இந்திய நாட்டிற்கு பெரும் அவமானம். எனவே லஞ்சம், ஊழல் முதலியவற்றில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், தரகர்கள் ஆகியோர்களுக்கு எதிராக போராடுவோம்.

- சுகதேவ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It