எத்தனையோ மைக்ராஸ்கோப்புகளைப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவேளை எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பைக்கூட பார்த்திருக்கலாம். உங்களில் ஒருசிலர் அதை உபயோகித்துமிருக்கலாம். மூலக்கூறுகளை வருடிப்பார்த்து அதன் உருவத்தை படம்பிடிக்கும் மைக்ராஸ்கோப்பை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். ஐ பி எம் (IBM) கம்பெனி அப்படி ஒரு மைக்ராஸ்கோப்பைத் தயாரித்திருக்கிறது. அதை அட்டாமிக் ஃபோர்ஸ் மைக்ராஸ்கோப் என்கிறார்கள்.

இது அதீத வெற்றிடத்தில் வேலைசெய்யும். இதில் லென்ஸ் எதுவும கிடையாது. ஒரு ஊசிதான் இதன் வருடும் பகுதி. இந்த ஊசியின் முனை ஒரே ஒரு கார்பன் மோனாக்ஸைடு மூலக்கூறு கொண்டது. இந்த முனை கவனிக்க வேண்டிய பொருளுக்கு ஒரு சில நேனோமீட்டர் தூரத்தில் இருந்து கவனிக்கும். இதனால் ஒரு தனி மூலக்கூறினைக்கூட கவனிக்க முடியும். மூலக்கூறுகளின் அணுக்களிலிருந்து வெளிப்படும் மின்புலத்தை இது நெருங்கும்போது பாதிப்படையும். அந்த பாதிப்பு வரைபடமாக வெளிப்படுத்தப்படுகிறது.

ஃபெயின்மேன 1959 இல் "ஒரு காலம் வரும், அன்று விஞ்ஞானிகள் அணுக்களையும் மூலக்கூறுகளையும் எடுத்து அடுக்கி உருவங்களை செய்வார்கள். அது நேனோநுட்பம் என்று அழைக்கப்படும்' என்றார். அவர் சொல் பலித்துவிட்டது.

படம்: பென்ட்டாசீன் மூலக்கூறு 3டி படமாக உள்ளது. மேலே காண்பது அதன் நிஜமான மூலக்கூறு வடிவம். அதற்கும் மேலெ தொங்குவது மூலக்கூறுகளைத் தொடாமலே வருடிப் பார்க்கும் அணுவிசை மைக்ராஸ்கோப்பின் நுனி.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

 

Pin It