Taj Mahal
காற்று மாசுபடுதலின் முக்கிய காரணிகளான சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற அமில குணம் கொண்ட வாயுக்கள் மழைத்துளியில் கலந்து பொழிவதுதான் அமில மழை எனப்படுகிறது. தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த அமிலமழை பெரும் அச்சுறுத்தலாகவே மாறிவிட்டது. சர்வதேச சட்டப்படி ஒரு நாட்டின் விஷ வாயுக்கள் பறந்து மற்றொரு நாட்டில் அமில மழையாகப் பெய்தால் அது குற்றமாகும். உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் சுவர்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த அமில மழையே காரணம் எனக் கூறப்படுகிறது.

Pin It