இங்கிலாந்தில் உள்ள நோயாளிகள் உலகில் முதல்முறையாக ஏழு நிமிடங்கள் மட்டுமே செலவாகும் ஊசி மருந்து சிகிச்சை மூலம் புதிய புற்றுநோய் சிகிச்சையைப் பெறவுள்ளனர். அந்நாட்டின் தேசிய சுகாதார சேவைகள் (NHS) அமைப்பு, மருத்துவ மற்றும் உடல்நலப் பொருட்களுக்கான முகமையின் (MHRC) ஒப்புதலுடன் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ஊசி மூலம் மருந்தை செலுத்தவுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு மருந்து மூலம் வழங்கப்படும் சிகிச்சை நேரம் மூன்றில் ஒரு பகுதியாகக் குறையும்.

Atezolizumab என்று அழைக்கப்படும் இந்த மருந்து வழக்கமாக நோயாளிகளின் உடலில் ஐவி எனப்படும் நரம்பு வழி முறையில் செலுத்தப்படுகிறது. இந்த ஊசி மருந்தை நோயாளிகள் இப்போது சாதாரண ஊசி போடும் முறையில் பெறுவர். நுரையீரல், மார்பகம், கல்லீரல் மற்றும் ப்ளாடரில் ஏற்படும் புற்றுநோய் போன்ற பல வகை புற்றுநோய்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இந்த மருந்து டெசண்ட்ரிக் (Tecentriq) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மருந்து இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 3,600 பேர்களுக்கு நரம்புகள் மூலம் கொடுக்கப்படுகிறது. இதற்கு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகிறது. இப்போது இது கொடுக்க ஏழு நிமிடங்கள் மட்டுமே ஆகும். கீமோதெரபி (chemotherapy) செய்து கொள்பவர்களும் இந்த ஊசி மருந்தைப் பெறலாம். இது உடலின் புற்றுநோய் செல்களைக் கண்டுபிடித்து அழிக்க உதவுகிறது.syringe 500புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆரோக்கிய சேவைகள் நோயாளிகளுக்கு இது போன்ற நவீன புற்றுநோய் சிகிச்சையைப் பெற உதவுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று புற்றுநோய்க்கான இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவைகள் பிரிவின் (NHS) தேசிய இயக்குனர் பேராசிரியர் பீட்டர் ஜான்சன் (Prof Peter Johnson) கூறுகிறார்.

உலகில் முதல்முறையாக

முதல்முறையாக உலகில் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்தின் மூலம் நோயாளிகள் மருத்துவமனையில் செலவிடும் நேரம் குறையும். கீமோதெரபி சிகிச்சையை எடுத்துக் கொள்ள இது உதவியாக இருக்கும். புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இது உதவும். தோலுக்கு அடியில் போடப்படும் இந்த முறையால் சிகிச்சை விரைவாக நடைபெறும். இம்மருந்தை உற்பத்தி செய்யும் ராச் (Roche) நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி இந்தp புதிய மருந்திற்கு நோயாளிகள் கூடுதல் விலை கொடுக்க வேண்டியதில்லை.

புதிய ஊசிமுறை நோயாளிகள் விரைவான சிகிச்சையைப் பெற உதவுகிறது என்று இந்த மருந்தை உற்பத்தி செய்யும் ராச் (Roche) நிறுவனத்தின் மருத்துவ இயக்குனர் மேரியஸ் கோல்ட்ஸ் (Marius Scholtz ) கூறுகிறார். குறைவான வலி, குறைந்த அசௌகரியம், நிர்வாக வசதி மற்றும் சிகிச்சைக்காகும் குறைவான நேரம் போன்றவற்றால் தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்புத் திசுக்களில் சஃப்க்யுடேனியஸ் (Subcutaneous (SQ or Sub-Q) என்ற முறையில் மருந்தைப் பெறவே பெரும்பாலான நோயாளிகள் விரும்புகின்றனர்.

இந்த மருந்து ஆரம்பநிலையில் உள்ள நுரையீரல் புற்றுநோயாளிகளிடம் அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபிக்கு பிறகு நோய் மீண்டும் ஏற்படுவது மற்றும் இறப்பு விகிதத்தை 34% குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்த புதிய சிகிச்சைமுறை உடலின் நோய் எதிர்ப்புசக்தி புற்றுநோய் செல்களைத் தாக்கும் ஒரு புரதத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. அந்த செல்களை நோய் எதிர்ப்பாற்றல் எளிதாக அடையாளம் காண இத்தொழில்நுட்பம் உதவுகிறது.

இப்புதிய தொழில்நுட்பம் உலகம் முழுவதும் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்: https://www.theguardian.com/society/2023/aug/29/patients-in-england-will-be-first-to-access-seven-minute-cancer-jab?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It