பத்து நிமிட ஸ்கேன் பரிசோதனை டிமென்சியாவை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த முறை பரவலாக நடைமுறைக்கு வரும்போது நினைவாற்றலைப் பரிசோதிக்கும் மருத்துவமனைகளில் இது வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனை முறையாக மாறும்.

மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு இடையில் இருக்கும் தொடர்புகளை இந்த ஸ்கேன் ஆராய்கிறது. நோயின் கவனிக்கத்தக்க அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே டிமென்சியாவைக் கண்டறிய இந்த ஸ்கேன் உதவுகிறது. ஆய்வில் பங்கேற்றவர்களின் ஓய்வுநிலை மூளை ஸ்கேன் பரிசோதிக்கப்பட்டது.dementia 700“ஒருவரின் மூளையில் நோயின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. எந்த ஒரு ஸ்கேனரையும் பயன்படுத்தி இந்தப் பரிசோதனையை நடத்தலாம்” என்று ஆய்வுக்குழுவின் தலைவரும் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளருமான பேராசிரியர் சார்ல்ஸ் மார்ஷல் (Prof Charles Marshall) கூறுகிறார்.

அல்சைமர்ஸ் நோய்க்குப் புதிய மருந்துகள் வரவிருக்கும் நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஐசை (Eisai) ) என்ற நிறுவனம் தயாரித்துள்ள லெக்கயின்மாப் (lecanemab) மற்றும் இலிலிலி (Eli Lilly) என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள பயோஜென் (Biogen), டொனயின்மேப் (donanemab) மருந்துகள் யு.கே. மருந்துப் பொருட்கள் மற்றும் ஆரோக்கிய சேவை உற்பத்திப் பொருட்கள் ஒழுங்குபடுத்து முகமையால் (MHRA) பரிந்துரை செய்வது குறித்து ஆராயப்படுகிறது.

இந்த புதிய ஸ்கேன் முறையின் மூலம் மீட்க முடியாத இழப்பை ஏற்படுத்தும் மூளை செல்களின் அழிவைத் தடுக்க முடியும். செயல்பாட்டு எம் ஆர் ஐ ஸ்கேன் மூளையின் எந்த பகுதிகள் முக்கிய வேலைகளை செய்கின்றன என்பது பற்றி அறிய, பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பை மதிப்பிட, மூளை சிகிச்சைக்கு வழிகாட்ட பயன்படுகிறது.

இந்த ஸ்கேனின் உதவியுடன் மூளையின் இயல்புநிலை பயன்முறையில் (default mode Network DMN) ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஆய்வில் பங்கேற்றவர் எந்த வேலையும் செய்யாமல் படுத்திருந்த நிலையில் அவருடைய மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு இடையில் நிகழும் தொடர்பு செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.

மூளையின் பல்வேறு பகுதிகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு செயல் திறனுடன் தகவல் தொடர்பு கொள்கின்றன என்பதை இயல்பு நிலை பயன்முறை பிரதிபலிக்கிறது. அல்சைமர்ஸ் நோயைக் கண்டறிதலில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆய்வில் பங்கேற்ற தன்னார்வலர்களில் 81% பேர் பிற்காலத்தில் டிமென்சியாவால் பாதிக்கப்பட்டனர். இயல்பு நிலை பயன்முறை மாற்றங்களை அறிய செயற்கை நுண்ணறிவு படிமுறை (AI algorithm) உதவியது.

இதன் மூலம் ஒருவர் நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருக்கிறாரா அல்லது ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா என்பதை முன்கூட்டியே அறிய முடியும். மாதிரிகளைக் கொண்டு 80% துல்லியத் தன்மையுடன் ஒருவர் நோயால் பாதிக்கப்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஸ்கேன் பரிசோதனை அதை கண்டறிந்து கூறுகிறது. இந்த ஆய்வுக்கட்டுரை Nature Mental Health என்ற இதழில் வெளிவந்துள்ளது.

ஒருவர் நோயால் பாதிக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எவ்வளவு காலம் கழித்து டிமென்சியாவிற்காக பகுப்பாய்வு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இந்த முறை மூலம் அறியலாம். அல்சைமர்ஸ் மற்றும் சமூக தனிமை போன்றவற்றுடன் மரபணுரீதியான பாதிப்புகள் மூளையின் தொடர்பு மாற்றங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. அல்சைமர்ஸ் நோயைக் கண்டறிய சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூளைப் புரதங்களை இலக்காகக் கொண்ட இரத்தப் பரிசோதனை முறையுடன் சேர்ந்து இந்த ஸ்கேன் பரிசோதனையையும் மேற்கொள்ளலாம்.

“டிமென்சியா ஏற்பட்ட நூறு பேரில் ஸ்கேன் பரிசோதனைக்கும் கண்டறிதல் ஆய்விற்கும் இடையில் இருந்த சராசரி கால இடைவெளி 3.7 ஆண்டுகள். சரியான நேரத்தில் நோய் கண்டறியப்படாவிட்டால் நோயாளி டிமென்சியாவுடன் தொடர்புடைய மற்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார். டிமென்சியா இருக்கிறதா என்று முன்கூட்டி கண்டுபிடித்து கூறுவதைக் காட்டிலும் நோய்க்கான சாத்தியக்கூற்றை முன்கூட்டியே கண்டுபிடித்து கூறும் வகையில் இந்த ஆய்வுகள் மேலும் ஆழமாக ஆராயப்பட வேண்டும்” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிமென்சியா தடுப்பு பொது சுகாதார அணுகுமுறை ஆய்வாளர் டாக்டர் செபாஸ்டியன் வால்ஷ் (Dr Sebastian Walsh) கூறுகிறார்.

“இந்தப் பரிசோதனை டிமென்சியாவை முன்கூட்டியே கண்டறிய, துல்லிய சிகிச்சை அளிக்க உதவும். ஆனால் இந்த புதிய முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஸ்கேனர்கள், மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை போக்கப்பட வேண்டும். இதற்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்” என்று அல்சைமர்ஸ் சங்கத்தின் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இணை இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் ரிச்சர்டு ஓக்லி (Dr Richard Oakley) கூறுகிறார்.

இந்த புதிய தொழில்நுட்பம் வருங்காலத்தில் டிமென்சியா நோய் சிகிச்சை முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/society/article/2024/jun/06/ten-minute-brain-scan-could-detect-dementia-early-study-suggests?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்