மருத்துவ வரலாற்றின் விடிவெள்ளியாய் உதித்த ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர். ஹானிமன் அவர்களின் ஆராய்ச்சியில் தோன்றிய மருத்துவமுறை ஹோமியோபதி. இது மானுட சமுதாயத்திற்குக் கிடைத்த அரிய கொடை. எவ்விதப் பக்கவிளைவுகளும் இல்லை. முழுநலம் தரக்கூடியது. ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் உழைப்பாளி மக்களுக்கும் ஏற்றது. மனிதர்களைத் தாக்கும் அனைத்து நோய் களுக்கும் ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன. உடலில் காணப்படும் நோய்க்குறிகளோடு உணர்வுக் குறிகளையும் மனநிலைக் குறிகளையும் விசாரித்து, துயர்க்குறிகளுக்கும் அடிப்படையான மூலகாரணத்தை நீக்குவது ஹோமியோபதியின் சிறப்பம்சமாகும்.

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் தொழில்கள் சார்ந்த பல நோய்கள் மனிதர்களைப் பாதிக்கின்றன. விவசாயத் தொழிலிருந்து விஞ்ஞான ஆராய்ச்சிப்பணிகள் வரை பல்வேறு தொழில்களின் சூழ்நிலைகளுக்கேற்ப விதவிதமான வியாதிகள் தாக்குகின்றன. இத்தகைய நோய் களுக்கு ஹோமியோ சிகிச்சை மேற்கொண்டால் இயற்கையான வழிமுறையில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். நோய்கள் முற்றிலும் பரவலாகக் காணப்படும். தொழில்சார்ந்த சில உடல்நலப் பிரச்சனைகளுக்குப் பயன்படும் ஹோமியோபதி மருந்துகளைக் காண்போம்.

(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)

Pin It