பிப்ரவரி 14 உலக காதலர் நாள் என்று நாம் அனைவரும் அறிந்திருப்போம்.  நம்மைப் போன்ற திராவிடர் இயக்கங்களும், பெரியாரியலாளர்களும் ஜாதி, மத மறுப்புத் திருமணங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதால் காதலர் நாளைக் கொண்டாடுகிறோம். அனைவரையும் கொண்டாடச் சொல்லிப் பரப்புரைகளையும் நடத்தி வருகிறோம்.

அதேநேரம், அனைத்து இந்து மதவெறி, ஜாதிவெறி அமைப்புகளும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளும் இந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்று பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த ஜாதி, மத வெறியர்களின் நோக்கங்களைச் செயல்படுத்துவதற்காக சில கம்யூனிஸ்ட் தோழர்களும் காதலர் நாளை எதிர்த்து வருகின்றனர்.

நமது ஜாதி, மத செளக்கிதார்கள் பிப்ரவரி 14 ஆம் நாளில் காதலர்கள் கூடும் பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள், கோவில்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இளைய சமுதாயம் எந்த ஜாதிக்காரர்களையும், எந்த மதத்துக்காரர்களையும் கண்டு கொள்வதில்லை.  நமது மாணவர்கள் பிப்ரவரி 7 ஆம் தேதியே காதலர் தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கி, 21 ஆம் நாள் வரைத் தொடர்ச்சியாக, சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கிராமங்களில் ஜாதியையும், மதத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் பாதுகாக்கும் குலதெய்வக் கோவில்களில் சாமி கும்பிடு அறிவிப்பதைப் பார்த்திருப்போம். அதாவது சாமி கும்பிடக் குறி கேட்பது, சாமி சாட்டுவது, கங்கணம் கட்டுவது எனத் தொடங்கி சாமியைக் பெட்டியில் கொண்டுபோய் அடைப்பது வரை பல நாட்கள் தொடர்ச்சியாக விழாச் சடங்குகள் இருப்பதைப் பார்த்திருப்போம்.

அதற்கு இணையாக, காதலர் நாள் என்பதை 15 நாட்கள் வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறது மாணவ இனம். 96 படக் காதல் போல இல்லாமல், முத்தநாள், உதைக்கும் நாள், பிரிவு நாள் என காதலோடு முத்தத்தையும், பிரிவையும் கொண்டாடும் பண்பாட்டை நாம் வரவேற்க வேண்டும்.

இந்தப் பதினைந்து நாள் கொண்டாட்டங்களில் நுகர்வுப் பண்பாடும் வணிகமும் இருந்தால் அதை அகற்றுவதற்கு முயற்சி எடுக்கலாம். இந்து மதத்தின் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்றவற்றில் நடக்கும் வணிகக் கொள்ளையைவிட இந்தக் காதலர் நாள் கொண்டாட்டத்தில் பெரிய வணிகக் கொள்ளை நடப்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

காதலர் நாள் சரியா? தவறா? என்று பேசுவதற்கு முன்பு காதலர் நாளை இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிப்ரவரி 14 ஆம் தேதி நாய்களோடும், தாலிகளோடும் அலைந்து கொண்டிருக்கும் பெருசுகளுக்கு ஒரு செய்தி. காதலர் நாள் பிப்ரவரி 7 ஆம் தேதியே தொடங்கி விடுகிறதாம். பிப்ரவரி 7 இல் தொடங்கி 21 வரை நடக்கும் காதலர் விழா நடைமுறைகள் குறித்து, ஒரு பள்ளி மாணவி எழுதி அனுப்பிய தகவல்களை அப்படியே தருகிறோம். படியுங்கள்.

பிப்ரவரி 7: Rose Day

இன்று எங்க ஃபிரன்ட்ஸ் எல்லாரும் பிடித்த நபர்க்கு ரோஸ் குடுப்பொம். அப்றம் “ரோஸ் நாள் வாழ்த்துக்கள்! என்று சொல்வோம்.

பிப்ரவரி 8: Propose Day

இன்று நாங்க எங்களுக்குப் பிடித்த ஒரு நபர்க்கு பிரப்போஸ் பண்ணுவோம்.

பிரப்வரி 9:  Chocolate Day

இன்று நாங்க ஃப்ரன்ட்ஸ்க்கு சாக்லேட் வாங்கித் தருவோம். அப்றம் இன்று நாங்க நிறைய சாக்லேட் சாப்டுவோம்.

பிப்ரவரி 10:  Teddy Day

இன்று நாங்க பிடித்த நபருக்கு ‘டெடி’ வாங்கிக் குடுப்போம்.

பிப்ரவரி 11:  Promise Day

இன்று நாங்க ஃப்ரன்ட்ஸ்குள்ள பிராமிஸ் பண்ணுவோம்.

பிப்ரவரி 13: Kiss day

இன்று நாங்க எங்களுக்கு பிடித்த நபருக்கு Kiss கொடுப்போம்.

பிப்ரவரி 12: Hug Day

இன்று நாங்க ஃபிரன்ட்ஸ் குள்ள  Hug பண்ணுவோம். அப்றம்  Happy Hug Day அப்டினு சொல்லுவோம்.

பிப்ரவரி 14: Valentine Day

இன்று நாங்க ஒன்றும் பண்ண மாட்டோம். இன்று Lovers கொண்டாடும் நாள். நாங்க சும்மா what's App Status மட்டும் போடுவோம்.  Happy  valentine 's day அப்டினு போடுவோம்.

அப்றம் இந்த நாளில் பச்சை வண்ண  Dress போட்டா வந்து  Waiting அப்டினு அர்த்தம்.

சிவப்பு வண்ண  Dress போட்டா  Committed அப்டினு அர்த்தம்.

கருப்பு வண்ண  Dress போட்டா காதலில் விருப்பம் இல்லை அப்டினு அர்த்தம்.

இந்த மாதிரி  Dress போட்டு கொண்டாடுவாங்க. அப்றம் (Heart Pop) அப்டினு ஒரு Chocolate இந்த வாரத்தில் மட்டும் தான் கிடைக்கும்.

பிப்ரவரி 15: Morattu Single Day

காதல் பண்ணி Break up செய்தவர்களுக்கு இந்த நாள். அவுங்க தான் இந்த நாளைக் கொண்டாடுவாங்க. ஆனா அவுங்க Crush, crazy, site அப்டினு எல்லாமே பண்ணுவாங்க. ஆனா காதல் மட்டும் பண்ண மாட்டாங்க. அவுங்க, காதல்?... அப்டினா என்ன? அப்டினு கேப்பாங்க. ஆனா அவுங்களுக்குத் தான் எல்லாமே தெரியும்.

பிப்ரவரி 16:  Perfume day

இந்த நாள் அப்போது மட்டும் கடைகள்ல  Perfume அதிகமாக விப்பாங்க.  அப்றம் இந்த நாள் அப்போ நாங்க எங்களுக்குப் பிடித்த  Perfume  அடிச்சிட்டு வருவோம்.

பிப்ரவரி 17: Kicking Day

இந்த நாள் அப்போ  எங்களுக்கு யார் கிடைத்தாலும்  அவுங்களப் போட்டு  நாங்க உதைப்போம். அதுதான் Kicking day.  அப்றம் நாங்க உதைத்த  அப்றம் Happy Kicking day அப்டினு சொல்லிட்டுப் போய்ட்டே இருப்போம்.

பிப்ரவரி 20: Miss day  

அப்டினா  இந்த ஒரு நாள் மட்டும் Friends & Lovers எல்லாரும் தனித் தனியா இருப்போம். தனித்தனியா இருந்து Miss பண்ணுவோம். எங்க நட்ப ஆளைள பண்ணுவோம்.

பிப்ரவரி 21: Break up day

இந்த நாள் தான் மிக முக்கியமான நாள். ஏன்னா,  இந்த நாள் அப்போ Lovers Break up பண்ணிக்குவாங்க.  Rose day இருந்து  ஆரம்பித்து கடைசீல Break up day வரை கொண்டாடுவாங்க நம்ம  Youngsters.  இந்த நாள் தான் கடைசி நாள்.

V - Max Game

இந்த Game மை ஆரம்மித்த கூட்டம் யார் அப்டின B2NILYJ Guys. இது யார் அப்டினா  உலகத்துல மிக மிக முக்கியமான ஆளுங்க இவுங்களாம். இவுங்க இருக்குறதால தான், இந்த உலகம் இவ்ளோ வேகமா  ஓடுது. அப்றம் இந்த ழுயஅந முக்கு  வரலாம்.

இது Chris ma Chris game மாதிரி தான் இதுவும். ஆனா, Chrismas நேரத்தில் விளையாடினால் அதன் பெயர் ஊாசளை Chris ma Chris game.  Valentine day நாட்களில் விளையாடினால் அது  V - Max  game. இந்த விளையாட்டை பிப்ரவரி 7 லில் ஆரம்பித்து  பிப்ரவரி 14 ல் முடித்திடுவோம்.

எப்பிடி அப்டினா, முதலில், இந்த விளையாட்டை விளையாடும் போது ஒரு கூட்டம் வேண்டும். அந்தக் கூட்டத்ததுல ஒரு 8 இல்லனா, ஒரு 10 பேர் விளையாடலாம். இந்தக் கூட்டத்துல இருக்குற எல்லாருடைய பெயர்களையும் ஒரு சின்னத்  தாளில், தனித் தனித் தாளில் எழுத வேண்டும். அப்றம் அந்தச் சீட்டைக் குலுக்கிப் போட வேண்டும். 

அப்றம் ஒவ்வொருவரும் ஒரு ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அந்தச் சீட்டைப்  பிரித்துப் பார்க்க வேண்டும். பார்த்த சீட்டில் யார் பெயர் வந்துருக்கோ அவுங்களுக்கே  தெரியாம அவுங்க Bag or  Pouch இல் தினமும் ஒரு Chocolate  போடணும்.  with Dare என்று எழுதிப் போடணும். அந்த னுயசந சய அவுங்க செய்யணும். அப்பிடி செய்யலனா அவுங்களுக்கு ஒரு தண்டணை இருக்கும்.

அப்றம் நமக்கு யார் பெயர் வந்துருக்கு அப்டினு, யாருக்கும் சொல்லக் கூடாது. கடைசி நாளில் தான் நமக்கு யார் பெயர் வந்துருக்கோ அவுங்களுக்கு ஒரு Gift வாங்கித் தரணும். எனக்கு உன் பெயர் தான் வந்துருக்கு அப்டினு சொல்லி அந்த Gift ஐ தந்து, இந்த விளையாட்டை முடித்திடணும். இது தான்  V - Max game..

Pin It