அரசுப்பள்ளிகளில் தமிழை அப்புறப்படுத்தி ஆங்கிலவழிப்புப் பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 28.5.2014 அன்று காலை 10 மணிக்கு சென்னை (கிரீன்வேய்ஸ் சாலை) பள்ளிக் கல்வி அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தியதால் காலப் போக்கில் அரசுப் பள்ளிகளில் இருந்தும் தமிழ்வழிக் கல்வி காணாமல் போகும் அபாயம் உள்ளது. தாய்மொழிக் கல்விக்கு வரவிருக்கும் பேராபத்து குறித்து கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் விளக்கும்  காணொளி.

தமிழ்வழிக் கல்வி குறித்த தோழர் தியாகு நேர்காணல்

 

தமிழ்வழிக் கல்வி குறித்த கல்வியாளர் திரு இராசகோபாலன் நேர்காணல்

 

தமிழ்வழிக் கல்வி குறித்த கல்வியாளர் கஜேந்திரபாபு நேர்காணல்

 

தமிழ்வழிக் கல்வி குறித்த திரு இறையெழிலன் நேர்காணல்

 

Pin It