அன்பார்ந்த தமிழக மக்களே! மீனவர்களே!! சென்னைவாசிகளே!!!

உலகளாவிய அளவில்,உதிரியான லும்பன் பொருளாதார வளர்ச்சி மாதிரிக்கான சான்றாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் போக்கை ஒருவர் சுட்டிக்காட்டலாம். இரண்டாம் உலகப் போருக்குப்பின் வேகமான பொருளாதார வளர்ச்சி கண்ட தெற்காசிய நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவை இந்திய வளர்ச்சியோடு ஒப்பிட்டால் இவ்வுண்மை மேலும் துல்லியமாக விளங்கும்.சமச்சீரற்றதுமாக,பொருளாதார கொள்கைக்கு நடைமுறைக்கும் தொடர்பில்லாத, ஒழுங்குக்கு உட்படாத, உபரி மூலதனத்தை சமூகத்திற்கு திருப்பியளிக்காத இந்திய பூர்ஷ்வா வர்க்கத்தின் அறுபாதாண்டுகால ஆட்சியானது, சமூகத்தில் தீவிரமாக முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது. வேலை வாய்ப்பின்மை, வறுமை, சுகாதாரமற்ற வாழ்க்கை முறையையும், இயற்கை வள இழப்பென பெரும் அழிவுகளையே இவ்வளர்ச்சி நமது சமூகத்திற்கு அளித்துவருகிறது.

கிராமப் பொருளாதரத்தின் அழிவு அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கிராமத்திற்கும் நகரத்திற்குமான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது. நகர்ப்புற பாட்டாளி வர்க்கம்,கிராமப்புற விவசாய வர்க்கம்,நகர்ப்புற நடுத்தர வர்க்கம் என சமூகத்தின் பெரும் வர்க்கப் பிரிவினர் இம்முரண்பாடுகளால் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தகைய நிலையில்,90 களில் இங்கே அறிமுகமான தாராளமய, உலகமய, நவ தாராளப் பொருளாதாரக் கொள்கை பெரு முதலாளிவர்க்க சுரண்டலை இன்னும் தீவிரப்படுத்தியது. இந்த காலகட்டத்தில்தான் உலகின் பல நாடுகள் அதிகமாக வணிகத் துறைமுகங்களையும்,சரக்கு பெட்டக மாற்று முனையங்களை கட்டத் தொடங்கியது. கடல்வழித்தடங்கள்,பெருங்கப்பல்கள்(வெசல்)போக்குவரத்து அதிகரிக்க கடற்கரையோரங்களில் உள்கட்டுமானப் பணிகள் முடிக்கிவிடப்பட்டன. அவ்வகையில் துறைமுக விரிவாக்கப் பணிகள், சாலை விரிவாக்கங்கள்,கப்பல் கட்டுமானப் பணிகள் தமிழகத்தில் வரத் தொடங்கின.இவற்றால் பெரும் தொழில்நிறுவனங்கள் மூலதனத்தை மூட்டை கட்டியது. இவ்வாறு 2001-இல் காமராஜர் துறைமுகம் (முன்னர் எண்ணூர் துறைமுகம் என்று அழைக்கப்பட்டது)

வடசென்னையில் மீனவ கிராமங்களுக்கு அழிவின் வாசலை திறந்துவிட்டன. காட்டுப்பள்ளி தீவில் அமைக்கப்பட்ட. இத்துறைமுகத்தை ஆழப்படுத்துவதற்கு தூர் வாரிய கடல் மண்ணை அத்திப்பட்டில் உப்பளங்களில் கொட்டி நாசம் செய்தது.இம்மண் ஆற்றில் கசிந்து ஆழத்தை கடுமையாக குறைத்து. மீனவர்களின் சிறு படகு போக்குவரத்தையும் மீன்,இறால் பிடித்தலையும் பாதித்தது. எண்ணூர் கொற்றலை ஆற்றின் கழிமுக அலையாத்திக் காடுகளோ, இன்று வேருடன் பிடுங்கப்பட்டு, மண் கொட்டி மூடப்பட்டு வருகிறது. எண்ணூர் துறைமுக விரிவாக்கத்திற்காக ஆழப்படுத்துகிற பணியில் எடுக்கப்படுகிற மண், கழிமுகத்தை மூடப் பயன்படுத்தப்படுகிறது.

காமராஜர் துறைமுகத்தின் ஒட்டு மொத்த விரிவாக்க திட்டமும் கொசஸ்த்தலை ஆற்றையும் கழிமுகதையும் அழிப்பதை,, நாசப்படுத்துவதை ஒட்டித்தான் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இத்தகைய பின்பிலத்தில்தான் நாம் வரவுள்ளை கன்னியாகுமரி மாவட்டட்த்தில் அமைக்கப்ப்பட உள்ள இனையம் துறைமுக திட்டத்தை கவனிக்கவேண்டியுள்ளது.முன்னதாக கேரள மாநிலத்தின் கொச்சின், வல்லார்பாடத்தில் சுமார் 3500 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்ட சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையமானது. அதன் மெகா ஊழல், நிதி மோசடிகளாலும் அதிக வாடகை வசூலாலும் தோல்வியடைந்த திட்டமாகி உள்ளது. ஆண்டுக்கும் சுமார் 10 லட்சம் சரக்கு பெட்டகங்களையாவது கையாளவேண்டிய அத்துறைமுகம் அதன் சரிபாதி பங்கு கூட இன்று வரையிலும் கையாள முடியாமல் தோல்வியில், நட்டத்தில் முடிந்து இருக்கின்றது

இத்தகைய சூழலில் வல்லார்பாடத்திலிருந்து 105 சுமார் நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள கேரள மாநிலத்தின் விளிஞ்ஞத்தில் சுமார் 7525 கோடி மதிப்பீட்டில் இதேபோன்று மற்றொரு சரக்கு பெட்டக மாற்று முனையத் துறைமுகத்தை அதானி கட்டுவதே நகைப்புகுரியாதாக உள்ளது. இத்தகைய சூழலில் அங்கிருந்து சிறுது தூரமே உள்ள தமிழ்நாட்டில் உள்ள இனையதில் மற்றொரு சரக்கு பெட்டக மாற்று முனையத் துறைமுகத்தை அமைப்பது கேலிக்கூத்து தவிர வேறொன்றுமில்லை. சுமார் 1830 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இத்துறைமுகத்தாலும் அதை ஒட்டிய இதர சாலைக் கட்டுமானத்திற்கும் பெரும் எண்ணிக்கையில் மீனவ மக்கள் புலம் பெயர்தலும், சூழலியல் தாக்கங்களும் ஏற்படும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பாஜகவின் அடையாள அரசியல் நலன் மற்றும் துறைமுக கட்டுமான குத்தகைதார்களின், பெருமுதலாளிகளின் நலன்களைத் தாண்டி இத்திட்டத்தால் மக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா? பழவேற்காடு முதல் இனையம் துறைமுகம்வரை நெய்தல் திணையின் அழிவும்,தமிழக மக்கள் வாழ்வியல் சிதைவும் அரங்க கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தின் கடற்கரை பற்றி விரிவாக ஆய்வும், புத்தகங்களும் வெளியிட்டுள்ள அறிஞர் விரிவாக வறீதய்யா கான்ஸ்தந்தின் அவர்கள் கருத்துரைக்க உள்ளார்

விவாதிப்போம். வாருங்கள்.

கருத்துரை: தோழர் வறீதய்யா கான்ஸ்தந்தின் அவர்கள்,

இடம்: இக்சா மையம், (கன்னிமரா நூலகம் எதிரில்) எழும்பூர் , சென்னை

நாள்: 13.09.2016 செவ்வாய் கிழமை

நேரம்: மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை

அனைவரும் வாரீர்!

ஒருங்கிணைப்பு

தண்ணீருக்கான பொது மேடை

தொடர்புக்கு:9842391963| 9566295902

Pin It