மரண தண்டனைக்கெதிராகவும், மதவாத சக்திகளைக் கண்டித்தும், சட்டவழிமுறைகள் அனைத்து வழக்குகளிலும் பின்பற்றப்படவேண்டும் எனக் கோர மக்கள் ஒற்றுமைக்கான இயக்கம், ஹெச்.ஆர்.எப் மற்றும் பி.யூ.சி.எல் ஆகிய மூன்று அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆகஸ்ட் 12ந் தேதி அன்று சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கின்றன. 

குறிப்பாக 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல்கள் குறித்த வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முகம்மது அஃப்சல், மற்றும் 2008 மும்பாய் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள கசாப் ஆகியோரை உடனடியாக தூக்கிலிடவேண்டுமென இந்துத்துவ சக்திகள் கூச்சலிட்டு வருகின்றன. அஃப்சலுக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் தொடர்பில்லை என உச்சநீதிமன்றமே கூறியிருப்பதைக்கூட அவ்ர்கள் மறைக்க முயல்கின்றனர். 

கசாப்போ அஃப்சலோ யாராக  இருந்தாலும் முறைப்படி வழக்குகள் நடத்தப்படவேண்டும், எப்படியும் மனித நாகரிகத்திற்கு முற்றிலும் முரணான மரணதண்டனை சட்ட புத்தகங்களிலிருந்து அகற்றப்படவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞர் நந்திதா ஹக்சர், பத்திரிக்கையாளரும் மக்கள் ஒற்றுமை இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஜே.ஸ்ரீராமன், பி.யூ.சிஎல்லின் தலைவர் வி.சுரேஷ், ஹெச்.ஆர்.எப்பின் இயக்குனர் ஆஸி பெர்னாண்டஸ்.ஆகியோர் பங்குபெறும் பொதுக்கூட்டம் சென்னையில் ஆகஸ்ட் 12 அன்று நடைபெறும்.  

நாள்: ஆகஸ்ட் 12, வியாழன்.

இடம்: நாயக் பவன், 14, செகண்ட் லைன் பீச்,

பொதுத் தபால் அலுவலகம் பின்னால்,

சென்னை- 1.

- மக்கள் ஒற்றுமைக்கான இயக்கம்

378, இரண்டாவது பிரதான சாலை,     

சி.எல். ஆர். ஐ. நகர், நீலாங்கரை,

சென்னை - 600041             

தொலைபேசி எண் : 9840874524

Pin It