மகன் : பெண் சிசுக் கொலைக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று திராவிடர் கழக மகளிரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களே அப்பா?

அப்பா : ஆம் மகனே!

மகன் : அப்படியானால், மரண தண்டனை சட்டப் புத்தகத்தில் நீடிக்க வேண்டும் என்கிறார்களா? இவர்கள் மரணதண்டனையே கூடாது என்று ஏற்கனவே எழுதியதை மறந்து விட்டார்களா அப்பா!

அப்பா : கழகத்துல இதெல்லாம் ‘சகஜமப்பா!’

மகன் : அப்பா, மற்றொரு சந்தேகம்.

அப்பா : கேள், மகனே!

மகன் : பெரியார் நூல்களை மற்றவர்கள் வெளியிட்டால், பெரியார் கருத்துகளை சிதைத்து விடுவார்கள் என்று கூறும் கி.வீரமணி, கன்னடத்தில், பெரியார் நூல்களை வெளியிட அனுமதி கொடுத்துள்ளதாக ‘விடுதலை’யில் செய்தி வந்துள்ளதே? நமக்குப் புரிந்த தமிழ் மொழியில் - பிறர் பெரியார் நூல்களை வெளியிட்டாலே கருத்து சிதைந்த விடும் என்று கூறுகிறவர்கள் நமக்குப் புரியாத கன்னட மொழியில் மட்டும் வெளியிட பிறருக்கு அனுமதிக்கிறார்களே, அது எப்படி அப்பா?

அப்பா : எனக்கு எதுவுமே புரியவில்லை, மகனே!

Pin It