மழைவரும் முன்
குடை எடுத்து வருபவர்களை
பலநேரங்களில் ஏமாற்றி விடுகிறது
மழை.
இன்று வராது என நினைத்து
குடை எடுத்து வராத நேரத்தில்
இறங்கி வந்து அவர்களை
மீண்டும் ஏமாற்றுகிறது மழை.
கால காலமாக
விவசாயிகளையும்
பல நேரங்களில்
குடை எடுப்பவர்களையும்
ஏமாற்றிக் கொண்டேயிருக்கிறது
மழை.
நாள் முழுவதும் கொட்டித் தீர்த்த
ஒரு மழை நாளில்
இது குறித்து தான்
முறையிட்டிருக்குமோ
மழையிடம் தவளைகள்?

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It