ஊருக்குள்
கொள்ளை நோய்
பரவுவதாக தகவல்
வ‌ந்த மறுநாள்
அரசாங்க அலுவலர்கள்
மாநாடு போட்டார்கள்.
நம்மூர் தட்பவெப்பநிலையில்
கொள்ளை நோய் பரவாது.
எப்படியும் கட்டுப்படுத்திவிடுவோம்
என்றார்கள்.
கொள்ளை நோய்
கண்டு அஞ்சற்க.
மாஸ்க்கால் வாயை இறுகி
மூடிக்கொள்ளும்படி அறிவுறுத்தினா‌‌‌ர்கள்
மக்களை.
 
யாரோ கேட்டார்கள்.
என்ன பதில்
இ‌து வரை
இறந்துப்போன உயிர்களுக்கு?
 
மாஸ்க்கால் கண்களையும்
மூடிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
 
- என்.விநாயக முருகன்

Pin It