நான் எனக்குள் என்னை தேடிக்
கொண்டிருந்த நள்ளிரவில்
திடுக்கிட்ட ஒரு திடீர் பொழுதில்
தூக்கி வாரிப் போட
எனக்குள் பார்த்தேன் அந்த பூனைக் குட்டியை
பிறந்ததிலிருந்து முதலில் பார்க்கையிலேயே
ஆறுமாத வயதிலிருந்து

எங்கேயோ பார்த்த சாயலில் இருந்தது.
யாருக்கோ கொடுக்க வேண்டியதென
எழுதி ஒட்டி இருந்தது

மறுக்கப்படுவதற்கும் மறுதலிக்கப்படுவதற்கும்
வெறுக்கப்படுத்தலுக்கும் விலகுதலுக்குமான
சாத்தியக்கூறுகள்
ஏராளமாய் தென்பட்டன

வெறுக்கப்படுதல் பழக்கமின்மையால்
ஒளித்துவைத்தேன் உள்ளுக்குள்
அதன் மியாவ் சப்தங்களைப்
புரிந்துகொண்ட உரிமையாளி
வெளியில் இழுத்து விரட்டி அடிக்கையில்
என் இதயத்தை தின்று செரித்து
பூனைக் குட்டி பூனையாகியிருந்தது

- லதாமகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It