1.

மகனே
வளர வளர நீ
நானாகிறாய்!

தளர தளர நீயாகிறேன்
நான்!!

2.

செடிக்குத்
தண்ணீர் ஊற்றியவன்
கரங்களில் கூடுதலாய்
மணக்கின்றது மலர்!

3.

அதென்ன ரகசியம்
பட்டாம்பூச்சிக்கு பூவுக்கும்
ஊடலே வருவதில்லை?

4.

பூவோடிரு!

பூவோடு சேரும் நாரே
மணக்கும்போது
நாம் ஏன் சிறக்கமாட்டோம்?

- அ.சீனிவாசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.