சாமியின் பெயரை
வைத்த போதும்
சாதியாகப் பார்ப்பதை
என்ன சொல்ல.

சட்டங்கள் நூறு இருந்தும்
குடிநீரில் மலம் கலந்த
கொடுமைக்காரனை
பிடிக்காததை
என்ன சொல்ல.

எங்கள் உணவை
எவரோ தீர்மானிக்கும்
இழி நிலையை
என்ன சொல்ல.

மிருகப் புனிதத்தில்
எங்கள் மேனி வதை
அறியாததை
என்ன சொல்ல.

சகோதர மதத்தவனை
சாமி பெயரைச்
சொல்லச் சொல்லும்
சர்வாதிகாரப் போக்கை
என்ன சொல்ல.

ஆளும் போதும்
பிறகு எதிராகும் போதும்
எங்களை பாராளுமன்றத்தில்
பகடைக்காய வைத்திருக்கும்
உங்களின் நிறமாற்றதைப் பற்றி
என்ன சொல்ல.

நீங்கள் ஒலிக்கச் சொன்ன
நாம ஜெபங்களால்
சொர்க்கம் வேண்டாம்
சோற்றுக்கே வழிகள்
செய்யாதபொழுது
சொல்ல வேண்டியதாகி விட்டது
ஜெய் பீமென
நீங்கள் வெறுப்பாக...
நாங்கள் விழிப்படைந்து
வெற்றி பெற...

- ரவி அல்லது