இப்படியாகத்தான்
இந்த மழை
பொழிந்தது.
இப்படியாகத்தான்
காடு மலை கடந்து
உருண்டோடியது.
இப்படியாகத்தான்
குளம், குட்டை
கம்மாய், ஊரணி
ஏரியென
எங்கும் சிறைபட்டது.
இப்படியாகத்தான்
வெள்ளப்பெருக்கில்
பிறகொரு நாள்
விடுதலை பெற்றது.
இவர்கள் தான்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாக அழைத்து
உபயோகித்துக் கொண்டார்கள்
கடலாகும் வாழ்க்கையில்
நீரோட்டப்
பிரயத்தனப் பாடின்
கண்ணீரான
தண்ணீரென அறியாமல்.
- ரவி அல்லது