மிக சத்தமாக பேசிக் கொள்கிறோம்
நாங்கள் இன்ன சாதியென்று
மிக சத்தமாக கேட்கத் துணிகிறோம்
நீங்கள் என்ன சாதியென்று

எளிதில் கடந்திட முடியவில்லை
சாதி இருப்பினை
சாதி அடையாளத்தினை

சாதி(தீ )
அடிப்படைத் தகுதியாயிருக்கிறது ஒருவரை
அங்கீகரிக்கவும் நிராகரிக்கவும்

சாதி(தீ )
சமத்துவமற்ற
சமநீதியற்ற வெற்றுச்சொல்
வெற்றுச்சொல்லை வேரோடு அறுத்தெறிய
திராணியற்றவர்களாய்
பல தலைமுறைகளை தீக்கிரையாக்கினோம்
சாதிய வன்மத்திற்கு

சாதி மீறல்
சாதி உடைப்பிற்கான ஆயுதம்
சாதி அழித்தலை விதைத்தெழ
எப்போது துணிந்தெழப் போகிறோம்?

இறுக்கப்பட்ட சங்கிலிகள் தகர்த்து
பல சாதி விந்தணுக்களை
ஒன்றாய் பிசைந்து
உரமூட்டியிருக்கிறேன் என்னுள்
சாதியற்ற சிசுவை அறுவடை செய்ய

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It