தீச்சட்டி
தூக்கிக் கொண்டு
ஒரு பூச்செண்டு போகிறது

*
கோடை மழைக்கு
குட்டி குட்டி கொம்பு
முட்டி முட்டி விளையாடுகிறது

*
காடற்ற யானை வீடற்ற பாகன்
கோயில் நுழைவாயில்
ஓவியமாய்

*
நூறு தாமரை நடுவே
ஒரு நாரை நான்
குளமே கும்மியடி

*
புறாக்களை விரட்டும்
ஆலயமணி ஓசையை
கர்த்தரும் விரும்பார்

*
நீந்தியது போக
மீன்கள் ஏந்திக் காட்டும்
போகம் குளம்

*
வெட்டுண்ட வானத்தை
Cut ஆன
நம் call -ல் உணர்கிறேன்

*
நகல் எடுக்கும் இயந்திரம்
குளங்கள் என்கிறேன்
இத்தனை நிலாக்கள்

*
உடன் படுங்கள்
முரண் படுங்கள்
ஆனால் வழி விடுங்கள்

*
கூடு விட்டு கூடு பாய்கிறதோ
தண்டவாளம் மாறும்
ரயில்

- கவிஜி

Pin It