இந்தத் தேடல் இருக்கிறதே...

இது எதற்காக
காலச் சக்கரத்தை
நிறுத்தித் தொலைக்கிறது.

இந்தத் தேடல் இருக்கிறதே
இது எதற்கு
பெருங்கூட்டத்திலும்
தவித்துப் போய்க் கிடக்கிறது

இந்தத் தேடல் இருக்கிறதே
இது எதற்கு
நிமிடத்திற்கு நிமிடம்
நிறமாறிக் கொண்டிருக்கிறது

இந்தத் தேடல் இருக்கிறதே
இது எதற்காக
உன் சாயலில் யாரோ ஒருவர்
கடக்கையில் நிமிர்ந்து
பார்த்திடச் சொல்கிறது

இந்த தேடல் இருக்கிறதே

இது எதற்காக
எப்போதும் தீராப்பசியென
இருக்கிறது.

- இசைமலர்