காகம் இருந்தஇடத்திற்குக்கீழ்
நான் நின்று கொண்டேன்
எச்சம் விழுந்ததில்
அதில் யாருடைய
வயிற்று எரிச்சலோ
வெகுநேரம் மேனிசுட்டது
அந்த வெந்நிறத்தின்
பெருந் தீட்டு என்னோடு கழிய
காகத்தின் படையலுக்கு
முதல்மனிதனாய்
எச்சம் ஏந்திக்கொண்டேன்
...
ஆலாபனையில்
ஒய்யாரமாய்
பறந்துகொள்ள துடிக்கும்
ஊஞ்சலின் தட்டு
ஒரு
அமர்வைத்தேடி
வெறுமையில் நின்றது
வெகுநேரமாகியதால்
தனிமையை அமர்த்திக்கொண்டு
ஆலாபனையில்
காற்றில் ஒலி
கொண்டது
- சன்மது