எல்லோராலும் கைவிடப்பட்டதொரு
பண்டிகை தினத்தில்
போவது
கசாப்புக் கடைக்கெனத் தெரியாமல்
குட்டிகளை வழிநடத்தும்
தாய் ஆடாய்
உன் திசையில் மேயும்
என் பிரியங்கள்
பெய்துவிட்டுப் போன
பெருமழையில் துளிர்க்குமென்ற கனவோடு
பட்டமரத்தில்
கூடு கட்டும் சிறு பறவை கணக்காய்
சுள்ளிகளைத் தூக்கியலையும்
உன் ஞாபகங்களை
ஆற்றுப்படுத்த
தோன்றவில்லை எனக்கு.

- ந.சிவநேசன்