இன்று தனிமை இங்கில்லை
கடல் மறுத்த மணல் போல
தாகமுள்ள கனவுகள்
இருக்கும் நிறங்களெல்லாம் வானில்
நீண்டதொரு இரவில்
ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்
கருப்பும் வெள்ளையுமாய்
உடைந்த நிலவு
சிந்திய புன்னகை போல்
சிதறியிருக்கும் மேகங்கள்
அலைகளற்ற அமைதியின்
ஆரவாரத்தில் ஒரு கடல்
திசைகளறியாமல் திரிகின்ற காற்று
யாருமே செலுத்தாமல்
அலையாடும் படகு
திரைச்சீலையாய்
அசையுமென் நிழல் பார்த்து
ஏதோவொரு தெருவில்
ஏதோவொரு சாலையில்,
ஏதோவொரு நகரத்தில்
என்னைப் பார்த்து கையசைத்த
யாரோ சுமந்து சென்ற
ஒரு தலையில்லா உடல்
நான் நினைவுகளில் வடித்ததைக்
கவிதையென்றது
கவிதையே ஆனேன் நான்
இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்
நானே விரும்பாத கவிதைகள்.
- விதூஷ்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)
- கழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை
- கம்பனில் செவியுணவு
- பதின்மூன்றாம் ஊழி
- கொடை மழை
- 'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை
- காங்கிரஸ் புரட்டுக்குத் தோல்வி
- சிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...
- சர்வாதிகாரப் பெற்றோர்கள்
- வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
அகநாழிகை - அக்டோபர் 2009
- விவரங்கள்
- விதூஷ்
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009