உதயத்திற்கு முன்பே வாசலில்
வண்ணமயமாகக் கோலமிட ஆசை !

எந்தப் புள்ளியையும் விரயமாக்காமல்
ஒவ்வொன்றையும் பக்குவமாய் இட்டு
நேர்கோடுகளை நேர்த்தியாக வரைந்து...

புள்ளிகளுக்கொரு வண்ணம்
பூக்களுக்கொரு வண்ணம்
இலைகளுக்கொரு வண்ணம்
கிளைகளுக்கொரு வண்ணம் இட்டு
வாசலை அழகுபடுத்த ஆசைதான்!

வாசலில் நிற்கிறேன்
தலைக்கு மேலே உக்கிரமான சூரியன்
காலுக்குக் கீழே வெறும் வாசல்
கோலமாவு கிடைப்பதில் தாமதம்...

மாலை வேளையை
அழகுபடுத்திப் பார்க்கவாவது
கிடைக்குமா அந்தக் கோலமாவு ?

- நல முத்துகருப்பசாமி

Pin It