ஓயாது என் கதவை
தட்டுகிறார்கள்
முகமறியாதவர்கள்
என் வீட்டில் நுழைய
அனுமதிக்கிறேன்.....
இருள் சூழ்ந்திருந்த
முற்றத்து மூளைகளில்
ஒளிபாய்ச்சிடுகிறது...
அழுக்குப்படிந்த
திரைச்சீலைகள்
அழகுற அசைந்தாடுகின்றன..
தூசு படிந்த ஊஞ்சல்
தூளியாகிறது ...
கேட்பாரற்றுக் கிடந்த
இசைத்தட்டுக்கள்
சுழன்று காற்றில் கரைகிறது..
மரித்துப் போனதாய்
நினைத்த மனம்
மீண்டும் உயிர் பெறுகிறது...
ஓயாது என் கதவை
யாரோ தட்டுகிறார்கள்...
புன்னகையுடன்
கதவைத் திறந்து விடுகிறேன்..
முடிவில்லா
அவ்வோசையில்
மூழ்கிட விழைகிறேன்...

- அருணா சுப்ரமணியன்

Pin It