நான் எனும்
பூட்டை திறந்தேன்
அது "நா"
"ன்" என
இருவேறாக பிரிந்தது.
"நா"விடம் கேட்டேன்
நான் யார்?
அந்ந "நா" தன்னை
மறந்து ஆடி களித்தது
பதிலேதுமில்லை.
சரி "ன்" நீ சொல்
அது தன் நெற்றியிலிருந்த
பொட்டை அழித்து
"ன" வாக மாறி மௌனித்தது.
பிறகு சிறிது பொழுது கழித்து
இப்போது அழிந்து போனதே
அந்த புள்ளி அது தான் நீ என்றது.
நான் நானென்பதை
மறந்து என் நானை
தேடிக் கொண்டிருக்கிறேன்..
நீங்களும் கூட தேடலாம்.

- சிபி சரவணன்

Pin It