எளிதில் கடத்தி விடுகிறது
இயல்பாய் ரகசியங்களை இயற்கை
பிற உயிர்களனைத்தும்
நிஜத்தின் இருப்பில் நிகழ்த்துகிறது
இன்றைய பொழுதுகளை
முதல் தோட்டமான ஆதாம்
ஏவாளின் தோட்டத்தில்
இன்னும் தேடுகிறார்கள்
முதல் முத்தங்களை மனிதர்கள்
பிற உயிர்களுக்கான
முதல் தோட்டத்திற்கு
வழி சொல்ல அழைத்தது பறவைகள்
பறவைகளின் முதல் தோட்டத்தில்
கேட்கிறது நிரம்பி வழியும்
உணர்வுகளின் சிறகுகள்
அதற்கான பெயரைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அது சுதந்திரமாகப் பறந்து
கொண்டேயிருக்கிறது
முதல் கருவறை மகத்தானது
இங்கு முடிவில்லாத கருவறையில்
முடிந்து போகுகிறது நம் வாழ்வு
காட்சிகளாக இடம் பெயர்ந்து
ரேகைகளில் பதிந்து
மனிதர்களைப் படித்துவிட்டு
தவிக்கிறது மொழியின் சுவடுகள்.

               ***
பற்றி எரியும் ஆழ்மன
பிளவுகளில் அசைகிறது உடல்
மூங்கிலின் ஆழ்தியானத்தில்
அணைகிறது நெருப்பு மனங்கள்
ஆழ்கடலின் உள்ளெழும்
மௌன இருப்புகளை
கிளறத்துடிக்கிறது அலைகள்
அலைகளைத் திணறடிக்கிறது
வெப்பத்தின் திரல்கள்
கடலின் வாசலில் நிற்கிறேன்
அது வரவேற்கும்
மணல் இடைவெளியில்
நிரம்பிவிட்டேன்
மணல் சிறைகளில் நிரம்பி வழியும்
காற்றின் வசந்தத்தோடு
முடிகிறது நீர்க்குமிழியின்
பயணங்கள்
வெடித்தெழும் சிதறல்களில்
தொடர்கிறது அர்த்தங்கள்
அர்த்தமற்ற சாம்பலில் எரிந்து
அடங்கிப்போகும்
பாவணைக்கூறுகளில் நான் காற்றை
வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
காற்று எரிந்த சாம்பலில்
மறைந்துள்ள பாவங்களைச்
சுமக்கிறது உடல்கள்
இந்த இருண்மை நகரத்தில்
நிழல்கள் வாசிக்கிறது நிஜத்தின்
புள்ளிகளை
அங்கே பற்றி எரிந்து
சாம்பலாகிப்போகிறது
ஒவ்வொருதுளியிலும்
நிஜத்தின் மறுபக்கங்கள்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It