அசோக மனதின்
அச்சத்தை அறிகிறேன்
அங்கோர் இளம் விதவை
முன் நெற்றி காட்டி நின்றிருக்கலாம்
இலை இருந்தும் கிளை இருந்தும்
ரத்தவாடை பிடித்திருக்காது
ஊர் பறவைகளுக்கு
அக்கினி குஞ்சுகளின்
அட்டகாசம் குத்தீட்டிகளை
நினைவூட்டியிருக்கும்
ஒவ்வொரு அரை அடிக்கும்
ஆறடி பிணம்
கிடப்பதெல்லாம்
குகை ஓவியத்திலும் கிடைக்காதது
ஈக்களின் ரீங்கார ஓங்காரத்தில்
ஒருமுறை வந்த சிரிப்பு எதற்கென்றே
தெரியவில்லை
அசோகனின் மண்டை வெடித்து சிதறி
மீண்டும் முளைக்க ஆரம்பித்தது
காட்சி பிழையோ கவிதை பிழையோ
நட்டு சென்ற சாலையோர மரங்களொன்றில்
முகநூல் கணக்கும் தொடங்கப்பட்டிருந்தது
காலச் செயலோ காவலாளி செயலோ
மீசையெடுத்து சிலிம்மாகி மாறுவேஷத்தில்
பின்னூட்டங்களில் தவழ்ந்த போது
ஆசுவாசமும் ஆயிரம் லைக்கும்
மடமனவென நிகழ
குழுவும் புரியாத தமிழும் புரியாத
முகநூல் போர்க்களத்தில்
அதி வேகமாய் உருவாகிக் கொண்டிருந்தான்
ஓர் ஆதி அட்மின்

- கவிஜி

Pin It