நான் மரித்துப் போகிற
பொழுதொன்றில்
நிச்சயம் என்னோடு
நீ இருந்திடல்
வேண்டும்!

என்
தலையை
ஒரு கணமேனும்
உன்
மடிக் கிடத்து!

கலைந்திருக்கும்
முடியை
உன் கரங்கொண்டு
நீவி
நேர்ப்படுத்து!

மூடிய
விழிக்குள்
உன்
முகம் மட்டும்
பதித்து
உறங்குவது போல்
செத்திருக்கும்
என் நெற்றியில்
முத்தமிடு!

விரித்த
கரங்கள்
உன் கரம்
புகுத்தி
இறுதியாய்
இறுகப் பற்றிக் கொள்!

கடைசியாய்...
கடைசியாய்...
என் காதருகே
வந்து
உன் காதல்
சொல்லிப் போ!

ஒருவருக்கும்
தெரியாது
என்னுயிர்
பிரியும் வேளையிலும்
தப்பாது
உனக்காய் தவித்திருக்கும்...
அதுவரை
நீ
பத்திரமாயிரு...