சாரங்கபாணியும் சதாசிவனும் இறங்குவதற்கு முன்னரே
சேறும் சகதியும் மண்டிய
இந்தக் குளத்தில்
இறங்கித் தூர்வாரியது
எங்கள் வீதி
மூக்கனும் அம்மாசியும்தான்
முதலில் குளத்தில் விழுந்தது
அவர்களின் வியர்வைத் துளிதானடி
குதம்பாய்...
அவர்களின் வியர்வைத் துளிதானடி குதம்பாய்...

- சதீஷ் குமரன்

Pin It