ஏதோ சொல்லத் துடிக்கிறது
இடம் பொருள் ஒவ்வா மனநிலை
ஒளித்து வைத்த உள்ளொன்று புறம் ஆகி மேய்கிறது
பேரழுகையோ பெரும் தவிப்போ
தேடலின் நுனியில் காட்டு வாசம்
தனித்த நடையில் தகிக்கும் மௌனம்
ஓடி ஓடி தொலைவது
கிடைப்பதற்கும்
கிடைத்து, திகைத்துப் பார்ப்பது தொலைவதற்கும்
சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போன பெரியண்ணன் சாயல்
காட்டை விட்டு ஓடி ஓடி வரும் சின்னத்தம்பி யானைக்கு...

- கவிஜி

Pin It