பதறிப் பறந்து போனது
தேன் சிட்டு
அகலாத பார்வையால்
துரத்திய கரும்பூனை
படர்ந்திருந்த பாசியில்
சறுக்கிக் கால் தவற
விட்டத்து நாட்டோடுகள்
நான்கைந்து
நடுமுற்றத்து
தண்ணீர் தவலையில்
தப்புத் தாளமிட்டன.
போர்த்திய வேட்டியின்
சூரிய திட்டுகள்
புரண்டு படுத்ததில்
இடம் மாறி விழுந்தன
நாசி தொட்டசக்கி
நனவை மீட்டது
நசுக்கிய பூண்டு
நித்திரை விலக
நினைவில் முட்டின
காலைக் கடனும்
வாங்கிய கடனும்.
- சித்தன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- இட ஒதுக்கீடு ஒரு பார்வை
- ‘நான் கருஞ்சட்டைக்காரன்’
- ராகுல் காந்தி நடத்தும் கருத்தியல் போராட்டம்
- பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது
- ‘சர்வம் நிரந்தரம்!’
- ‘பஞ்ச பூதங்கள்’ தான் உயிரை இயக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரானது
- பெரியார் சுவரொட்டியைக் கிழித்து மன்னிப்பு கேட்ட பா.ஜ.க.காரர்
- பார்ப்பானை எதிர்த்துப் பிழைத்திருப்பவர் நாமே!
- பெரியார் முழக்கம் ஜனவரி 19, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- பழந்தமிழரும் பண்டமாற்று வணிகமும்
அகநாழிகை - அக்டோபர் 2009
- விவரங்கள்
- சித்தன்
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009