உனக்கான
எல்லா நினைவுகளையும்
அழித்துக்கொண்டே வருகிறேன்..

உன் மீதான
வெறுப்பை இன்னும் கொஞ்சம்
புடம் போட்டு வளர்க்கிறேன்...

உன்னை
காரணமின்றி எதிரியாய்
பாவிக்கிறேன்..

அடங்க மறுக்கிறது
அத்தனை அன்பும்..
எங்கே பற்ற வைத்தாய்
என்பதறியாது!

- இசைமலர்

Pin It