lady 393ஒவ்வொரு முறை
ஊருக்கு கிளம்புகிறேன்
எனும் போதெல்லாம்
என்னுள் நிகழும்
மௌன ஒத்திகையை
நீ
அறிவாய்!
கடும் சிரத்தைகள்
நடுவே
உன் கண் பாராது
வழியனுப்பி வைக்கிறேன்.

போய் வா!
என்று
குரல் கம்முவதை
காட்டாது
போலி கம்பீரம்
உடைவதற்கு முன்
நீ புறப்படு!

என்னை
கோழையாக்கிய
குற்றவுணர்வினை
உனக்குத்
தர விருப்பமில்லை!

போய் வா!
என் பவித்ர அன்பு
உன்னைப்
பாதுகாக்கும்!

- இசைமலர்