jayalalitha 224தீர்ப்பு
அறிவிக்கப்பட்டது!

சில
வழக்குகளில்
தீர்ப்புகள்
வழங்கப்படுவதில்லை,
வாங்கப்படுகின்றன
என்ற
இந்திய நீதித்துறை
யோக்கியதை,
மக்களுக்கு
புரியவைக்கப்பட்டது..!

தண்டனை,
குற்றவாளிக்கு
அல்ல,
"நீதி"க்கு..!

குற்றவாளிகள்
விடுதலை
செய்யப்பட..
"நீதி" சிறைபட்டது!

நிதி கொடுத்தால்
நீதி கிடைக்குமெனில்,
எம் காவிரி
உரிமை மீட்கவும்
மூன்று தமிழரை
மீட்கவும்
எவ்வளவுதான்டா
கொடுக்கணும்?

சொல்லித்
தொலைத்தால்
இந்திய "நீதி"யை
இப்படியாவது
"வாங்கி"த்
தொலைப்போம்..

நடக்கும்
நிகழ்வுகளைப்
பார்க்கும்போது..
அண்ணன்
பேரறிவாளன்
தோளைச் சுற்றி..
ஒரு காலணா
வெள்ளை நூலை
மாற்றிவிடலாமா?

உடனே
விடுதலையாக
வாய்ப்புண்டு!

இதுதாண்டா
ஆரிய தர்மம்
அளிக்கும்
இந்திய நீதி!

- க.அருணபாரதி